ஜெர்மனியில் கால்பந்து போட்டிகள், மூடிய அரங்குகளுக்குள் மே மாத தொடக்கத்தில் துவங்கும் என்று அறிவிப்புகள் வெளியான நிலையில், கிரிக்கெட் குறித்த கேள்விகளுக்கு விடையளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ‘இந்தியாவிலும் ஜெர்மனியிலும் சமூக யதார்த்தம் என்பது முற்றிலும் வேறுபட்டது. மனித உயிர்கள்தான் முக்கியம். இப்போதைக்கு கிரிக்கெட் குறித்து எதையும் யோசிக்கவில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவைப் பொருத்தவரை கிரிக்கெட்டை அரங்கத்தில் மட்டுமே ரசிகர்கள் காண வருவதில்லை. கிரிக்கெட் வீரர்கள் தங்கும் அறைகள், விமான நிலையம், விடுதி என அனைத்து இடங்களுக்கும் கூட்டம் வரும். தடுப்பூசி வரும் வரை பெரிய கிரிக்கெட் போட்டிகளைக் குறித்து கனவு காண முடியாது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.கங்குலியின் கருத்தை ஏற்றிருக்கும் ஐபிஎல் ஃப்ரான்சைஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி இ ஓவான விஷ்வநாதன், ‘அரங்கத்தில் அனுமதிக்கமுடியாது என்று சொன்னபோதும் சேப்பாக்கத்தில் நடந்த பயிற்சியை காண ரசிகர்கள் வந்தது தெரியுமில்லையா? இந்திய ரசிகர் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கடினம். நிதி இழப்புகள் இருக்கும். ஆனால் அதற்காக ஒன்றும் செய்யமுடியாது’ என்று தெரிவித்துள்ளார்.