அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
130 பக்கம் கொண்ட திமுகவின் தேர்தல் அறிக்கை.
28 பக்கங்கள் கொண்ட முக்கிய அம்சங்கள்.
மாவட்டவாரியான அறிவிப்புகள் அடங்கிய தேர்தல் அறிக்கை.
- சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு
- திருக்குறள் தேசிய நூலாக்க வலியுறுத்தப்படும்
- கொரோனா நிதியாக ரேஷன் அட்டைக்கு 4000 ரூபாய்
- சொத்துவரி அதிகரிக்கப்படாது
- பால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் ( மானியம் )
- ஆலயங்களுக்கு குடமுழுக்கு நிதி ஒதுக்கப்படும்
- முதியோர் உதவி தொகை 1500 ஆக உயர்வு
- சத்துணவு ஊழியர்கள் அரசு ஊழியர்களாக மாற்றப்படுவர்
- பத்திரிக்கையாளர் நல ஆணையம் உருவாக்கப்படும்
- மகளிர் பேறுகால உதவி தொகை -24000
- முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைக்கு முன்னுரிமை
- தமிழர்களுக்கே தமிழர் வேலை ( 75% இட ஒதுக்கீடு )
- ஆட்டோ ஓட்டுனர்கள் சொந்த ஆட்டோ வாங்க 10000 ரூபாய் மானிய உதவி தொகை
- கல்லூரி மாணவிகளுக்கு டேப் இலவசம்
- மகளிருக்கான பேறுகால விடுப்பு 12 மாதங்கள்
- நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற தொடரிலேயே தீர்மானம்
- 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம்
- வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை
- மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள்.
- தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
- புகழ்பெற்ற இந்து கோவில்களுக்கு சுற்றுலா செல்ல ரூ.25,000 வழங்கப்படும்
- திருச்சி, மதுரைல மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்படும்
- 30 வயதிற்குள் இருக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து .
- மின்கட்டணம் மாதந்தோறும் கணக்கிடப்படும்
- ஏழை மக்கள் பசிதீர முதல் கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்
- இந்து ஆலயங்கள் புனரமைப்பு பணிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
- தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் புனரமைப்புக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் மூலம் முறையான பயிற்சிப் பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றி காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கும் உடனடி பணி நியமனம்.
- ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை துரிதப்படுத்தப்படும்
- ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க நடவடிக்கை
- பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்
32.இந்து கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல தலா ரூ. 25,000 மானியம்
- பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும்
- இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்படும்
- அரசு பணியில் 10 ஆண்டுகளுக்கு மேலுள்ள தற்காலிக ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவர்
- மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்படும்
- சிறு வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்
- வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக திட்டங்கள் செயலாக்க அமைச்சகம்
Former Australian Cricketer Dean Jones passes away