ஆந்திர மாநிலத்தில் ஒரு சங்கம் நடத்தும் விழாவில் ஒரு சின்ன பையன் பாட்டு பாட்றார் அந்த விழாவிற்கு தலைமை தாங்கிய நடுவர் உனக்கு நல்ல குரல் இருக்கு , நீ சினிமாவில் வாய்ப்பு தேடுனு சொல்றாங்க அதை நம்பி சென்னையில் வாய்ப்பு தேட ஆரம்பிக்கறப்ப எம்எஸ்வி நீ தமிழ் முழுசா கத்துக்கிட்டா நல்ல எதிர்காலம் இருக்குனு சொல்றார் , அதை நம்பி இரண்டு வருடம் தமிழ் மொழியை முழுசா கத்துகிட்டு திரும்ப வந்து
எம்ஜிஆர் படத்தில்
” ஆயிரம் நிலவே வா ” என்னு ஒரு கணீர் புது குரல் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறது ,
அந்த குரல்தான் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் குரல் …!
அந்த நடுவர் : ஜானகி அம்மா …!
ஆரம்பத்தில் இசை பற்றிய எந்த ஒரு பரிச்சயமும் இல்லாத எஸ்பிபி திரை இசையில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை சுமார் 40,000….!
முறையாகக் கர்நாடக இசையைப் பயிலாத காலத்தில் சங்கராபரணம் என்ற படத்தில் முழுக்க முழுக்க கர்னாடக இசையில் அமைந்த பாடல்களைச் சிறப்பாகப் பாடி உலகம் முழுவதும் பிரபலமானார். அதற்காக தேசிய விருதைப் பெற்றார்.
சங்கராபரணம் பாடல்கள் : https://youtu.be/k2gx_U5BxI4
அதிக எண்ணிக்கையில் பாடல்கள் பாடியவர் என்ற வகையில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் எஸ்பிபி
..!
இது இல்லாமல் ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது , தமிழக, கர்நாடக அரசுகளின் பல விருதுகள், ஆந்திர அரசின் நந்தி விருது (25 முறை),என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் ….!
இந்த சாதனைகள் எல்லாம் தாண்டி எஸ்பிபி செய்த சில சாதனைகள் வியப்புக்குரியது
1981-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களைக் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காகப் பாடிச் சாதனை புரிந்துள்ளார்.
அதே மாதிரி தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடிச் சாதனை செய்துள்ளார்.
எம்ஸ்வி , கேவி மகாதேவன் முதல் இன்றைய ஜிவி பிரகாஷ் வரை அவர் வேலை செய்த இசையமைப்பாளர்கள் ஏராளம்….!
குறிப்பாக இளையராஜா – எஸ்பிபி காம்போவின் பல நூறு பாடல்கள் நம்முடைய பல இரவுகளை கடக்க செய்து கொண்டிருப்பது நாம் செய்த புண்ணியம் …!
தெலுங்கு தாய்மொழியாக இருந்தாலும் இவர் எந்த மொழியில் பாடுகிறறோ அந்த மொழியின் அழகியல் கெடாமல் அந்த மொழியின் இயல்பான உச்சரிப்புடன் பாடுவதுதான் இவரை இத்தனை வருடங்கள் அந்த துறையில் இருக்க வைத்துள்ளது…!
நிறைய பாடகர்களை கண்ட திரை உலகம் இது ஆனால் எஸ்பிபி ஏன் தனித்து தெரிகிறார் என்றால் சின்ன சின்ன சங்கதிகள் கூட எஸ்பிபி அழகாக பாடி பாட்டிற்கு வலிமை சேர்ப்பார் , அதோடு மட்டுமல்லாமல் பாடல் இடையே வரும் சிரிப்பு அதுவும் ஒரு அரை சிரிப்பு சிரித்து பாடல் பாடுவதை எஸ்பிபி மட்டும்தான் மிகச்சரியாக கையாண்டு வருகிறார்…!
வெறும் பாடல் பாடுவதோடு இல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் , நடிகர் , இசையமைப்பாளர் , தயாரிப்பாளர் என தன்னுடைய பன்முக திறமையையும் எஸ்பிபி வெளிப்படுத்தியுள்ளார் …!
கமல், ரஜினி, பாக்யராஜ் உள்ளிட்ட பலருக்கு பல்வேறு மொழிப் படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்…!
தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்…!
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இசையமைத்துள்ளார்…!
முதல் மரியாதை சிவாஜி கேரக்டரில் முதலில் நடிக்க கேட்டது எஸ்பிபியைதான் அன்று அதை அவர் மறுத்து விட்டதை பெரிய தவறாக இன்றுவரை கருதிக் கொண்டிருக்கிறார்…!
சில பாடல்கள் பாடியிருந்தால் குறிப்பிட்டு சில பாடல்களை சொல்லிவிடலாம் நாற்பதாயிரம் பாடல்களில் எதை பிடித்த பாட்டு , பிடிக்காத பாட்டு என்று வகைப்படுத்துவது மிக கடினம். இருந்தாலும் எனக்கு பிடித்த சில பாடல்களை இங்க வரிசைப்படுத்தியுள்ளேன்…!
- சங்கரா – சங்கராபரணம் – கேவி மகாதேவன் இசை …!
- கண்ணம்மா கனவில்லையா – விஷ்வ துளசி என்ற படத்தில் எம்எஸ்வியின் இசை…!
- கம்பன் ஏமாந்தான் – நிழல்கள் நிஜமாகிறது ..!
- ஆயிரம் நிலவே வா – அடிமைப் பெண் ..!
- மன்றம் வந்த தென்றலுக்கு – மௌனராகம் ..!
- எல்லோரும் சொல்லும் பாட்டு – மறுபடியும் …!
- சங்கீத ஜாதி முல்லை – காதல் ஓவியம் ….!
- காதலின் தீபம் ஒன்று
- உன்னை நினைச்சேன்
- காதலே காதலே – டூயட்
- நான் ஆட்டோக்காரன் – பாட்ஷா
- என்னவென்று சொல்வதம்மா
- அகரம் இப்ப சிகரம் ஆச்சு
- இதோ இதோ என் பல்லவி
- சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
- அய்யயய்யோ நெஞ்சு அலைகிறது
- காதல் தீ – இரண்டாம் உலகம்
தன் குரலினால் இன்றும் நம் வாழ்வினை ஓட வைத்து கொண்டிருக்கும் பாடும் நிலா பாலுவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்….!
Photography credits: Joseph Raja
Women let rape happen, don’t blame only men: Bhagyaraj