Penbugs
Coronavirus

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ள ஹுண்டாய் கார் நிறுவனத்தில் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 16 ஊழியர்களுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவு ஒரிரு தினங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, அங்குள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சோதனை செய்யுமாறு ஊழியர் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதைப் போன்று அரியானா மாநிலம் மனேசரில் உள்ள தனது கார் உற்பத்தி ஆலையில் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியானதாகவும், மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாக வாய்ப்புள்ளதாகவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இதனால் கொரோனா காலகட்டத்தில் தொழிற்சாலைகளை திறந்தால் தொற்று மேலும் பரவும் என்ற அச்சம் தொழிலாளர்களிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 1000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு

Penbugs

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை – தமிழக அரசு

Penbugs

கொரோனாவால் பாதித்து, குணமடைந்த நடிகர் சூர்யா

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு- எடப்பாடி கே. பழனிசாமி

Kesavan Madumathy

Former President Pranab Mukherjee on ventilator support, remains critical

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Penbugs

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

Penbugs

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31 தேதி வரை பொது முடக்கம்

Penbugs

தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் அஜித்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5667 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

இன்று தமிழகத்தில் 5768 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs