Coronavirus

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ள ஹுண்டாய் கார் நிறுவனத்தில் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 16 ஊழியர்களுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவு ஒரிரு தினங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, அங்குள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சோதனை செய்யுமாறு ஊழியர் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதைப் போன்று அரியானா மாநிலம் மனேசரில் உள்ள தனது கார் உற்பத்தி ஆலையில் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியானதாகவும், மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாக வாய்ப்புள்ளதாகவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இதனால் கொரோனா காலகட்டத்தில் தொழிற்சாலைகளை திறந்தால் தொற்று மேலும் பரவும் என்ற அச்சம் தொழிலாளர்களிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,035 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதம் 62 சதவீதமாக அதிகரித்துள்ளது

Penbugs

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

COVID19: Gibbs to auction bat he used for chasing 438

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

அமெரிக்காவில் இரண்டு வளர்ப்பு பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

Penbugs

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்

Kesavan Madumathy

முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு

Penbugs

Dawlat Zadran mankads Noor Ali Zadran | Shpageeza Cricket League

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy