கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனி நபர்கள், நிறுவனங்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, முகக் கவசம்அணியாமல் வெளியில் செல்லும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பது, கிருமி நாசினி வசதி இல்லாமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது
