Coronavirus

ஐடி நிறுவனங்கள் 50 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 50சதவீத பணியாளர்களுடன் வரும் 13 ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது .

ஆனால் தற்போதைய ஊரடங்கு நடைமுறைப்படி பணி செய்வதில் சிரமம் இருப்பதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்ததன் பேரில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 90% பணியாளர்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பொது போக்குவரத்து வசதிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் முடிந்தவரை பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய ஊக்குவிக்குமாறும், பணியாளர்கள் அடிக்கடி கை கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

Shahid Afridi tested positive for COVID19

Penbugs

COVID19 in Tamil Nadu: 669 new cases, 509 from Chennai

Penbugs

7 YO throws prom for nanny as its cancelled due to COVID19

Penbugs

Fake: No, Bharat Biotech’s VP is not getting COVAXIN

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

Penbugs

தமிழகத்தில் இன்று 5800 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Air India Express: Pilot and Co-pilot dead after crash

Penbugs

COVID19 in Chennai: Complete lockdown from 26th to 29th!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5850 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.7,500; மத்திய அரசுக்கு காங்., குழு சிபாரிசு

Penbugs

தமிழகத்தில் இன்று 5165 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs

Leave a Comment