Coronavirus

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பொதுமக்களைக் கடந்து, அரசியல் பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரும் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தனக்கும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரபல தெலுங்கு பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பதிவில், ‘கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் லேசாக காய்ச்சல் வந்தது. அந்த காய்ச்சல் தானாகவே குணமடைந்தாலும், நாங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அந்த சோதனை முடிவில் எங்களுக்கு லேசான அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின்படி, நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர், ‘எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நலமாக உள்ளோம். ஆனால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தெடுக்க காத்துக்கொண்டிருக்கிறோம். அப்போதுதான் ப்ளாஸ்மா செல்களை தானம் செய்ய முடியும்’என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

COVID19: Punjab becomes 2nd state to extend Coronavirus lockdown

Penbugs

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Penbugs

COVID-19: Meet DRV, a Disaster Management Organisation working tirelessly to help people

Penbugs

Mujeeb ur Rahman hospitalized after testing COVID19 positive

Penbugs

Karthik Dial Seytha Yenn- Nostalgic ride that we all needed to get through lockdown

Penbugs

COVID19: Father-daughter dress up as famous characters to throw thrash

Penbugs

எஸ்.பி.பி. பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் – நடிகர் சல்மான்கான்

Penbugs

COVID19: Captain Manpreet and 4 other Indian hockey players tested positive

Penbugs

தமிழகத்தில் மேலும் 2174 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Penbugs

தமிழகத்தில் இன்று 3924 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Two crew members from Jacqueline Fernandez’s shoot tested COVID positive

Penbugs

Vemal volunteers as sanitary worker to help his village

Penbugs

Leave a Comment