Penbugs
Editorial News

மெட்ரோ ரயில்களில் பயணிக்க முக கவசம் கட்டாயம் : சென்னை மெட்ரோ

தீபாவளியை முன்னிட்டு நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் நேரம் Penbugs

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் நாளை (ஜூலை 07) முதல் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ssஇது குறித்து வெளியான அறிக்கையில்

சென்னையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் நாளை (ஜூலை 07) முதல் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்து செல்வோரும் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பில் மெட்ரோ நிர்வாகத்திற்கு உதவிடுமாறு மெட்ரோ நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது‌.

Leave a Comment