Cinema

நடிகை ஸ்ரீப்ரியாவின் குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்!

ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள ‘யசோதா’ குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

1970-களில் பிசி ஹீரோயினாக வலம் வந்தவர் ஸ்ரீப்ரியா. ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகியாகவும் உள்ளார். இந்நிலையில், இந்த ஊரடங்கு காலத்தில் ‘யசோதா’ எனும் குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார் ஸ்ரீப்ரியா. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி முதல் படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா சார்ந்த அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் செல்போன் மூலம் இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்ரீப்ரியாவோடு இணைந்து நடிகர்கள் நாசர், சிவகுமார் (சிவாஜி கணேசன் பேரன்) ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொண்டுள்ளார். க்ரிஷ் பின்னணி இசையமைக்க, நிருத்யா பிள்ளை பாடியுள்ளார்.

இந்த குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ட்விட்டரில் வெளியிட்டுள்ள கமல்ஹாசன், “இதுவொரு சுவாரசியமான முயற்சி‘யசோதா’ குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

செவாலியே சிவாஜி கணேசன் – நினைவு நாள்

Kesavan Madumathy

Keerthy Suresh’s special birthday tribute for Vijay

Penbugs

SACRED GAMES

Penbugs

Tourist Family: For those who haven’t given up on fairytales or each other

Penbugs

CAA is no threat to Muslims: Rajinikanth

Penbugs

Current: Thalapathy 64 recent updates

Penbugs

நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Kesavan Madumathy

This is the superstar we love!

Penbugs

இசையின் ஏக இறைவா..!

Kesavan Madumathy

Kaathu Vaakula Rendu Kaadhal shoot starts from today

Penbugs

Beyond the boundary | Netflix Documentary

Penbugs

Thangar Bachan: An alcove in the garden of Tamil cinema

Lakshmi Muthiah