- என் கனவுக்கு ஒரு
உரு (உருவம்) தேவை - நீ தேவை ஆயிழையே (பெண்)
இப்படி சின்ன சின்ன வார்த்தை
ஜாலத்துல விளையாடுறது தான்
மதன் கார்க்கியோட ஸ்பெஷல்,
இப்படி அழகான காதல் பாட்டுல
தன்னோட நண்பன் அவன் காதலி
கூட பிரச்சனையா இருக்கப்போ தன்
நண்பனுக்கு சிபாரிசுக்கு செல்லும்
இன்னொரு நண்பன் அப்படியே
சென்னை ஸ்லாங்ல தன்னோட
நண்பன் அந்த பொண்ணு மேல
எவளோ லவ் வச்சுருக்கான்
அப்படின்றத மெலோடி வித்
சென்னை கானா ராகத்தில் கார்த்திக்
தன் இசையை கொஞ்சம் பெப்பியாக
கொடுக்க காட்சியாய் அதை கெளதம்
வாசுதேவ் மேனன் படமாக்கியுள்ளார்,
சாந்தனு – டான்ஸ் மூவ்லாம் கூல் – லா
இருக்கும் செம்ம Swag ரேஞ்சுல, நம்ம
தளபதிக்கே டஃப் கொடுக்க கூடிய
ஆளு, அவர் டான்ஸ் சர்ப்ரைஸ்
பண்ணும்ன்னு பாத்தவங்களுக்கு
ஆச்சரியம் என்னென்ன கலையரசன்
அதான் நம்ம “மெட்ராஸ் அன்பு” சும்மா
பட்டய கிளப்பி இருக்காரு அசத்தலா,
கோரியோகிராபி சதிஷ் தானே சோ
அவரோட ஸ்டைல்ல ரொம்ப
எதார்த்தமா Lyrical ஹிப்ஹாப்ல
பாடல் வரிகளுக்கு ஏற்ப
சாந்தனுவிற்கும் குட்டி குட்டி
எக்ஸ்பிரஸன் கொடுத்து நடன
அமைப்பில் ஜொலிக்கிறார்,
இசையை தாண்டி பாடல் பாடிய
கார்த்திக் மற்றும் கானா குணா
இருவரும் போட்டி போட்டு
தங்களின் பணியை அழகாக
செய்திருக்கிறார்கள்,
ஒரு பக்கம் கெளதம் பட காதல்
ஸ்டைலில் கார்த்திக் பாடினால்
இன்னொரு பக்கம் கானா குணா
வெற்றிமாறன் பட காதல் ஸ்டைலில்
அதகளம் பண்ணுகிறார்,
மதன் கார்க்கியை நம்பினோர்
எப்போதும் கை விடப்படார் என
சொல்லும் அளவிற்கு பாடலின்
வரிகளுக்கு எப்போதும் காட்சிக்கான
வரிகளுடன் சேர்த்து அதற்கு உயிர்
கொடுப்பார்,அந்த உயிர் நம்
செவிகளில் ஊசாலாடிக்கொண்டே
இருக்கும் பாடல் கேட்கும்
போதெல்லாம்,
Read: https://penbugs.com/karthik-dial-seytha-yenn-nostalgic-ride-we-all-need-to-get-through-lockdown/
கார்த்திக் டயல் செய்த எண் –
குறும்படம் கலவை விமர்சனம்
வந்திருந்தாலும் ” Ondraga Originals ” –
என்ற பிராண்ட் மூலமாக வெளிவரும்
பாடல்களில் எல்லாம் ” கெளதம்
மேனன் – கார்க்கி – கார்த்திக் ‘ இந்த
மூவர் கூட்டணி ஒரு போதும் நம்மை
ஏமாற்ற மாட்டார்கள்,
- கூவ
- உலவிரவு
- போதை கோதை
(இந்த வரிசையில் “ஒரு சான்ஸ் கொடு”)
இதில் இன்னொரு ஸ்பெஷல்
என்ன வென்றால் ஒவ்வொரு
பாட்டு ஆரம்பிக்கும் போதும்
அடுத்த பாடலுக்கான லீட் அதில்
இருக்கும் நன்றாக கவனித்து
கேட்டீர்கள் என்றால் தெரியும்,
||
உடனடி தேவை
என் இதயத்துக்கொரு
துணை தேவை
என் நிழலுக்கு ஒரு துணை தேவை
அவ்விரண்டையும் அடைந்திட
நீ தேவை
உடனடி தேவை என் கனவுக்கு
ஒரு உரு தேவை
என் கவிதைக்கு சிறு கரு தேவை
தேவை நீ தேவை ஆயிழையே
||
மொட்டை மாடி காதல்
என்றும் ஸ்பெஷல் தான்ல
அது மாதிரி GVM Visual – ல
அப்படி ஒரு காதல் பார்க்குறப்போ
“காத்து வாக்குல ஒரு காதல்” மாதிரி
இன்னும் அழகா தெரியும்,
Song Link : https://youtu.be/nifRSmk6riM
Toxic environment: The Ellen Show is under investigation