Penbugs
Cinema

சார்பட்டா பரம்பரை-விமர்சனம்

இயக்குனர் பா ரஞ்சித்தின் சென்னையை சார்ந்த கதைக்களங்கள் மிகவும் ரசிக்கதக்கவை.

காலா படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஞ்சித்தின் இயக்கத்தில் வந்துள்ள படம் சார்பட்டா பரம்பரை.

வட சென்னையின் பாக்சிங் கலாச்சாரம் என்பது மிகவும் பழமை வாய்ந்தது

குறிப்பிடத்தக்க பரம்பரைகளாக சார்பட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்பச் செட்டியார் பரம்பரை என பல குத்துச் சண்டையைக் கற்றுக்கொடுத்த பயிற்சி மையங்கள் இருந்து வந்தன‌ .

அதை கதைக்களமாக கொண்டு பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ஆர்யா ,பசுபதி , கலையரசன், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் , காளி வெங்கட் , ஜான் விஜய் என பலரின் நடிப்பில் இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

படத்தின் மிகப்பெரிய பலம் படத்தின் டெக்னீசியன்கள்…!

கலை இயக்குனர் ராமலிங்கம் எழுபதுகளின் சென்னையை அழகாக காட்டியுள்ளார் . அதே போல் படத்தின் கேமராமேன் முரளியும் ரஞ்சித்தின் கனவினை அழகாக உயிர்பித்து காட்டியுள்ளார். படத்தில் சண்டை மிகவும் யதார்த்தமாக அதுவும் இயல்பான சண்டையாக அமைய‌ வைத்த ஸ்டண்ட் இயக்குனர் அன்பறிவு என அனைவரும் கவனம்‌ ஈர்க்கின்றனர்.

ஆர்யா பல சறுக்கல்களை சந்தித்து வரும் வேளையில் சரியான படமாக சார்பட்டா பரம்பரை வெளியாகியுள்ளது . படத்திற்காக ஆர்யாவின் உடற்பயிற்சி வீடியோக்கள் தந்த ஆச்சரியத்தை படம் முழுவதும் தந்துள்ளார் .

உடல் அமைப்பில் இருந்து ,உண்மையான குத்துசண்டை வீரினின் அனைத்து அங்க அசைவுகளையும் தத்ரூபமாக தந்துள்ளார் ஆர்யா . இந்த படம் நிச்சயமாக ஆர்யாவுக்கு ஒரு‌ மைல்கல்லாக அமைந்துள்ளது .

பசுபதி இந்த மனுசனை என்னனு சொல்ல, தன் கூட எத்தனை பேர் நடிச்சாலும் தன்னுடைய நடிப்பில் சர்வ சாதரணமாக ஓவர்டேக் செஞ்சிட்டு போறார் .

பசுபதிக்கு உண்டான உரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்க பெறாமல் இருப்பது தமிழ் சினிமாவின் துரதிருஷ்டம். படத்திற்கு பசுபதியை கொண்டு வந்ததில் இருந்தே ரஞ்சித்தின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.

படத்தில் ஆங்காங்கே மாஸ் சீன் இருந்தாலும் அவை இயல்பிற்கு நெருக்கமாக இருப்பது படத்தை அதிகம் ரசிக்க வைக்கிறது ‌.

முக்கியமாக டேன்சிங் ரோஸ் உடனான போட்டி , கிளைமேக்ஸ் போட்டி என அனைத்திலும் ரஞ்சித்தின் உழைப்பு தெரிகிறது.

அனைத்து கேரக்டர்களும் அளவாக எடுத்து எழுதப்பட்டு இருப்பது படத்தின் திரைக்கதையை இலகுவாக நகர்த்தி செல்ல பயன்பட்டு இருக்கிறது.

ரஞ்சித் படத்துக்கே உண்டான அரசியல் குறீயிடுகள் ஆங்காங்கே வருவது , திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கான போட்டி , சில இடங்களில் ரஞ்சித்தின் டிரேட்மார்க் வசனங்கள் என்று ரஞ்சித் அதனை ரசிக்க வைத்ததில் வெற்றி பெறுகிறார்.

ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் காம்போ தமிழ் சினிமாவின் வெற்றி காம்போ என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. கதையை சிதைக்கா வண்ணம் பிண்ணனி இசையையும், பாடல்களையும் தந்து இருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

“நீயே ஒளி‌” பாடலுக்கு ஒரு‌ ஸ்பெஷல் பூச்செண்டு..!

பொதுவாக பாக்சிங் படம் என்றால் யூகிக்க முடிந்த கிளைமேக்ஸ் தான் என இருந்தாலும் மனிதர்களின் ஈகோ விளையாட்டுகளின் மூலம் சுவாராசியமாக கொண்டு சென்று இருக்கிறார் பா.ரஞ்சித். கிளைமேக்ஸ் நீளத்தை சற்று குறைந்து இருக்கலாம் .

படம் திரையரங்குகளில் வெளி வந்து இருந்தால் அது ஒரு புது வித அனுபவமாக இருந்து இருக்கும் .

பா.ரஞ்சித்தின் முந்தைய படங்கள் சிறிது கலவையான விமர்சனங்களைப் பெற்று இருந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தை மிக கனகச்சிதமாக செய்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை டிரைலரில் வரும் ஒரு வசனம் ….!

“போய் சொல்லுனா நான் யார்னு எல்லாருக்கும் நிரூபிக்கற நேரமிது “

சார்பட்டா பரம்பரை – ரஞ்சித்தின் ஆட்டம்

Related posts

Sarpatta Parambarai [2021]: The Ultimate Victory of an Underdog

Lakshmi Muthiah

Sarpatta Parambarai release date announced

Penbugs

Leave a Comment