Penbugs
Editorial News

யோனோ ஆப், நெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது – எஸ்பிஐ அறிவிப்பு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நாட்டின் மிகப்பெரிய வங்கி சேவையை வழங்கி வருகிறது.

அன்றாட வாழ்வில் மக்களின் வசதிக்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் Yono மற்றும் Yono Lite ஆப்கள் நடைமுறையில் உள்ளன.

இந்த ஆப் ஆண்ட்ராய்டு, மற்றும் ஐஓஎஸ் என அனைத்துவிதமான ஸ்மார்ட் போன் பயனாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது.

இந்த ஆப்கள் மக்கள் பணப்பரிவர்த்தனைகள், டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ஷாப்பிங், பணம் செலுத்துதல், ரீசார்ஜ் போன்ற சேவைகளுக்கு பயன்படுகின்றன.

இந்த ஆப்கள் தர மேம்பாட்டு பணிகளுக்காக இன்று (23/05/2021) பகல் 2 மணி வரை செயல்படாது என அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இண்டர்நெட் பேங்கிங், YONO மற்றும் YONO Lite ஆகியவை செயல்படாது என அறிவித்துள்ளது. RTGS(Real-time gross settlement) பணிகள் வழக்கம் போல நடைபெறும்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வங்கி அறிவித்துள்ளதாவது,

எஸ்பிஐ-யின் ஆன்லைன் சேவைகள் அனைத்தும் இந்த நேரத்தில் செயல்படாது. அதாவது மே 23 இரவு 12.01 முதல் மதியம் 2 மணி வரை இந்த சேவைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இவை பராமரிப்பு பணிகளுக்காக செயல்படாது என்றும், நாங்கள் சிறப்பான வங்கி சேவையை வழங்குவதற்காக முயற்சிக்கிறோம், வாடிக்கையாளர்கள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Comment