Coronavirus

சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கை: ஆந்திராவில் அசத்தல்…!


ஆந்திரா மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில், சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் கொண்ட பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலின் முக்கிய தடுப்பு நடவடிக்கையான சமூக இடைவெளியை பின்பற்ற தொடர்ந்து அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில், பொதுப்போக்குவரத்தை சமூக இடைவெளியுடன் நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் தயாராகி வருகின்றன. அதற்கு ஏற்றார்போல, ஆந்திர போக்குவரத்துக் கழகம் வழக்கமாக பேருந்துகளில் இருக்கக்கூடிய இருக்கைகளின் வடிவமைப்பை முற்றிலும் மாற்றி மூன்று வரிசைகள் கொண்ட இருக்கையாக மாற்றியுள்ளது. இதன்மூலம் ஒரு நபருக்கும் இன்னொருவருக்கும் ஒரு மீட்டர் இடைவெளி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் பயணிக்கக்கூடிய தொலைதூரப் பேருந்துகளுக்கு முதற்கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் போக்குவரத்து துவங்க வேண்டும் என்ற காரணத்திற்காக இதுபோன்ற ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும், சகஜமான நிலை வந்த பிறகு இருக்கைகள் பழைய முறையைப்போல மாற்றவும் முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பேருந்துகள் முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும், இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்டவை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று 6334 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Man rescued by Sonu Sood, names his shop after him

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3861 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Varalaxmi Sarathkumar distributes food to 1600 migrant workers

Penbugs

COVID19: Kurnool pays adieu to 2 Rs doctor Ismail

Penbugs

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

China’s Wuhan bans eating, hunting of wild animals

Penbugs

COVID19: Former cricketer and UP Minister Chetan Chauhan criticial, on ventilator support

Penbugs

இதுவரை தமிழகத்தில்7.75 லட்சம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

Penbugs

COVID19: Trails for Russia’s vaccine to begin in India in few days

Penbugs

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

Kesavan Madumathy

Chhattisgarh CM orders suspend rape accused IAS officer

Penbugs