Editorial News

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் இன்று திறப்பு

சேலம் மாநகரில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மற்றும் இரண்டடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

புதிய சேவை திட்டத்தின் கீழ் சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, ஐந்து ரோட்டை மையப்பகுதியாக கொண்டு இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 7.87 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக மிக பிரம்மாண்டமாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணா பூங்காவில் முடியும் பாலம் 5.01 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பாலத்தின் ஒரு பகுதி, ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சந்திப்பு வரை மூன்று கிலோமிட்டர் தூரம் கொண்டது.

அந்த பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜுன் 7-ம் தேதி திறந்துவைத்தார். குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான பாலம் கட்டும் பணி அனைத்தும் முடிவடைந்து விட்டதால் இன்று திறக்கப்படுகிறது.

பாலத்தின் இரு புறமும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டால் சேலம் 4ரோடு, ஐந்து ரோடு, ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் இல்லாத நிலை ஏற்படும்.

5 ரோடு அருகே இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார். பின்னர் பாலத்திலும் அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

அதனைத்தொடர்ந்து, சேலம் லீ பஜார் பகுதியில் 46 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்க இருக்கிறார்.

Related posts

Facist Government?

Penbugs

Three die at Corona ward in Kanyakumari; Ministry reasons underlying illness

Penbugs

ஆந்திராவில் விஷவாயு கசிவு – 1,000 பேர் பாதிப்பு

Penbugs

NZ PM Jacinda Ardern stays cool as Earthquake strikes during live interview

Penbugs

Jhansi park’s ‘ghost exercise’ video goes viral

Penbugs

Dr Tamilisai to help realize a tailor’s daughter MBBS dream!

Penbugs

Lockdown: Manju Warrier helps 50 transgender

Penbugs

Chennai Power shutdown on July 18 for Maintenance: List of places

Penbugs

“All-Pet” Private Jet to carry stranded pets from Delhi to Mumbai

Penbugs

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

Kesavan Madumathy

Trump to ban Chinese airlines from flying to US

Penbugs

AR Rahman is accused by Income Tax dept of routing income to his foundation

Lakshmi Muthiah