Cinema Inspiring

Sushant’s Final Emotional Ride

படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும்,

Manny – க்கு Osteosarcoma
Jagdhish Pandey – க்கு Glaucoma
Kizie Basu – க்கு Thyroid Cancer

நம்ம தலைவர் ரஜினிகாந்த் சிவாஜி
படத்துல சொன்ன வசனம் தான்,

சாகுற நாள் தெரிஞ்சு போச்சுன்னா
வாழுற நாள் நரகமாகிடும்,

So,இருக்க மிச்சமான நாட்கள்ல
ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு
அவங்க உறவுக்கு உள்ள இருக்க
சின்ன சின்ன அழகியல் சார்ந்த
ரசனையுடைய விஷயங்களை வாழ்ந்து
பாத்துட்டாலே ஒரு மோட்சம் கிடைச்சுரும்,

ஓ, அப்போ இது தான் கடவுள்
நமக்கு வழி காமித்த கடைசி ஒளி போல்
என்று,

நீங்க ரொம்ப விரும்புன ஒருத்தங்க
இப்போ உயிரோட இல்லன்னு
நீங்க உணரும் போது அந்த நொடி
உங்க முகத்துல ஒரு சிரிப்பு வருமா..?

வரும் !!

அவங்க உங்க கண்ணுக்கு முன்னாடி
உங்ககூட இருந்த அழகான நாட்கள
பிரதிபலிச்சு உங்களுக்கு காட்டும் போது,

கள்ளங்கபடமில்லா சிரிப்புடன்
கண்களில் சிறு துளி கண்ணீருடன்
இழந்தவரின் நினைப்பு உங்களுக்கு
வருமாயின்,

முதன் முதலாக எதர்ச்சையாக
நாங்கள் சந்தித்தோம் அவனின்
Irritate செய்யும் சிரிப்புடன்,

பிறகு நாம் இணைந்து கை கோர்த்து
நடனமாடினோம் என் சம்மதமின்றி,

அதே மாலை நேரத்தில்
பேருந்து நிலையத்தில் சந்தித்தோம்,

என் அம்மாவிடம் நீ என்
பாய் ஃப்ரெண்ட் என்று நகையாடினாய்,

பிறகு ஒரு அழகான இடத்திற்கு
என்னை கூட்டிச்சென்றாய்,

நான் அபிமன்யு வீரின் இசைக்கு
அடிமை ஆனேன் அவரின் முற்று பெறாத
பாடலின் காரணத்தை தேடித்திரிந்தேன்,

நீயோ ரஜினிகாந்த்தை கடவுள் போல் பாவித்து அவரை பின்பற்றினாய்,

பிறகு உன் நண்பன் இயக்கும்
படத்தில் நாம் இணைந்து நடித்தோம்,

நம் இருவரின் புரிதல்
நம் உறவுக்கு பாலமாக அமைந்தது,

பிறகு தன் நோயினால் உன் நண்பன் தன்
கண்களை இழந்து நிராயுதபாணி ஆனான்,

பின் ஒரு இரவில் நான் அபிமன்யு வீர்
அவர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன்
முற்று பெறாத பாடலின் காரணத்தை
கேட்டு,

பாரிஸ் நாட்டிற்கு வந்தால் அதற்கான
காரணத்தை தெரிந்து கொள்ளலாம் என்ற
பதில் மொழி அவரிடமிருந்து வந்தது,

என் உடல்நிலையை காரணம் காட்டி என்
பெற்றோர்கள் நான் பாரிஸ் செல்வதை
மறுத்தனர்,

பின்பு நோயின் தீவிரத்தால்
நான் மருத்துவமனையில்
அனுமதி செய்யப்பட்டேன்,

என் அப்பாவிடம் என் ஆசையை
நிறைவேற்ற நீ கூறிய வார்த்தைகள்
தான் எத்தனை வலிகளை உடையது,

பிறகு எனக்கு நம்பிக்கை அளித்து நீ
என்னை பாரிஸ் கூட்டிச்சென்றாய் என்
அம்மா உடன்,

நான் கனவில் மட்டுமே நடக்கும்
என்ற தினத்தை நீ என்
கண்களுக்கு விருந்தாக்கினாய்,

அபிமன்யு வீர் – அவர்களின் முன்
நாம் அமர்ந்திருந்தோம் முற்று பெறாத
பாடலின் காரணத்தை கேட்டு,

அபிமன்யு வீர் நல்ல கலைஞன்
ஆனால் அவர் செய்த செயல்களும்
உடல் மொழியும் நம்மை எரிச்சலூட்டியது,

இந்த பாடலை போலவே வாழ்க்கையும்
முற்று பெறாத ஒன்று தானே என்று நான்
உன்னிடம் கூறினேன்,

அன்று அந்த முற்று பெறாத பாடலை
நான் முடித்து தருகிறேன் என்று
எனக்கு நீ சத்தியம் செய்தாய்,

அதே பாரிஸ் நாட்டு தெருக்களில் நான்
உன்னிடம் என் காதலை சொன்னேன்,

நீ என் அருகில் வரும் போது என் இதயம்
வழக்கத்தை விட அதிகமாக துடிக்கிறது
என்று நான் உன் கண்களை பார்த்து
கூறினேன்,

என் காதலை நான் உன்னிடம்
தெரிவித்தேன் உன் முழு பெயருடன்
சேர்த்து I Love You Immanuel Rajkumar Junior என்று,

Osteosarcoma என்ற நோயில்
பாதிக்கப்பட்டிருந்த நீ மீண்டும் அன்று
ஒரு நாள் வலி ஏற்பட்டது என்று என்னிடம்
கூறினாய்,

பிறகு இந்தியா வந்ததும் நீ வலியில்
தவித்தாய் சுருண்டுவிட்டாய் உன்
அறையின் நான்கு முனை சுவற்றுக்குள்,

பிறகு உன் நண்பன் Jagdish Pandey – க்காக
நாம் படத்தை முடித்து கொடுத்தோம்
நீ உன் வலியோடு எனக்காகவும் உன்
நண்பனுக்காகவும் செய்து கொடுத்தாய்,

பிறகு நீ என்னை தலைவர் படம்
கபாலி ஓடும் பாயல் திரையரங்கிற்கு
வர சொன்னாய்,

நான் உன்னை காண வந்த போது
நீ வலியின் மிகுதியில்
துடித்துக்கொண்டிருந்தாய்,

சிறிய சிகிச்சைக்கு பின் என்னையும்
உன் நண்பனையும் தேவாலயத்துக்கு வர
சொன்னாய் நீ உயிருடன் இருக்கும்போதே
பின் ஒரு நாளில் நடக்கப்போகும் உன்
இறுதி சடங்கிற்கு ஒத்திகை காண,

உன் நண்பன் முதலில் பேசினான்
இப்படி ஒரு நண்பன் கிடைக்க நான்
செய்த பாக்கியம் தான் என்னவோ
அவன் என் அம்மா அப்பாவிற்கும் மேல்
போன்ற வார்த்தைகளை உன் நண்பன்
சொல்ல சொல்ல உன் கண்களில் கடல்
போன்ற நீர்த்துளிகள் பெருகி நின்றது,

பின் உன் காதலியான நான் பேசினேன்
என் வாழ்க்கையில் நீ வந்து என்னென்ன
மாயம் செய்தாய் என்றும் நம் அழகான
நாட்களை பற்றியும் நான் பேசி முடிக்கும்
போது இருவரின் கண்ணிலும் மாரி மழை
பெய்தது,

பின் ஒரு நாளில் நீ எங்களை விட்டு
பிரிந்தவுடன் கடைசியாக எனக்கு ஒரு
கடிதம் எழுதியிருந்தாய்,

அபிமன்யு வீர் அவர்களின் முற்று பெறாத
பாடலை நான் உனக்காக முற்று செய்து
விட்டேன் என்றும்,

ராஜா நான் இறந்துவிட்டேன்
இறந்த ராஜாவின் ராணியாக
நீ உயிர் பெற்றிருக்கிறாய் இப்போது
எங்கள் கதை வாழ்கிறது இப்பூமியில்
என்றும் கடிதத்தில் எனக்கு நீ பதில்
அளித்தாய்

ஒரு திறந்த வெளி திரையில் நாம் நடித்த
படம் ரிலீஸ் ஆகிறது நான் அங்கே வந்தேன்,

திரையில் நீயும் நானும் நாம் ஆனோம்
நான் உன்னை பார்த்து ரசித்தேன்
நான் உன்னை பார்த்து சிரித்தேன்
நான் உன்னை பார்த்து அழுதேன்
நான் உன்னை பார்த்து வியந்தேன்
எல்லாமுமே நீயா நின்றாய் திரையில்,

“சரி” என்பது நமக்காக நம் காதலுக்காக
உபயோகிக்கும் அழகான தமிழ்ச்சொல்,

படத்தின் முடிவில்,

“சரி Kizie Bazu” என்று
என்னிடம் நீ வினா எழுப்ப,

நீ இறந்த பின் என் உதடுகள் உன்னை
கண்டு சிரித்துக்கொண்டே “சரி” என்று
நான் விடை அளித்து உனக்கு பிரியாவிடை
செய்து வைத்தேன் நீ விரும்பும் காதலியாக,

சரி,நான் உன்ன லவ் பண்றேன்
சரி,நம்ம வெளிய போகலாம்
சரி,நம்ம சேர்ந்து வாழலாம்
சரி,நம்ம சிரிச்சிட்டே இருப்போம்
சரி,கொஞ்சம் அழுது தீர்ப்போம்

Sushant
You will always be Missed,

வாழ்ந்து பார்த்தாச்சு
கொஞ்சம் செத்து பாப்போம்ன்னு
உங்க முடிவ தேடிக்கிட்டிங்க போல ஹ்ம்ம்,

Picture Credits : Jo Surya

Related posts

Sivakumar pens emotional note to his beloved friend Visu

Penbugs

நம்ம வீட்டு பிள்ளை | சிவகார்த்திகேயன்!

Penbugs

Born this day (7th December)- Anya Shrubsole

Penbugs

Darbar 2nd look!

Penbugs

Tokyo 2021: Bhavani Devi becomes first Indian fencer to qualify for Olympics

Penbugs

ராக்ஸ்டார்…!

Kesavan Madumathy

Nayanthara and I have professional goals to achieve: Vignesh Shivn on wedding rumours

Penbugs

Dear Chinmayi Akka…

Penbugs

Key Milestones of Vajpayee’s political career

Penbugs

Breaking: Sushant Singh Rajput dies by suicide

Penbugs

Shobhana pens an emotional note for SPB

Penbugs

Hansika Motwani becomes first South Indian actor to get custom GIFs

Penbugs

Leave a Comment