Coronavirus

தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

TN government announce relaxation measures for industries in non-containment zones

தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் இருவர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று ஒரே நாளில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,547 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 316 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 63 பேருக்கும், விழுப்புரத்தில் 45 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,102 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட நபர்கள் 1,92,574. 3,822 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related posts

Time to spread love and kindness: Shruti Haasan

Penbugs

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரிப்பு

Penbugs

Banning apps not enough, need to give befitting reply to China: WB CM Mamata Banerjee

Penbugs

Heartwarming video: Residents welcomes COVID19 doc with thunderous applause

Penbugs

கொரோனா நோயாளிகள் இல்லாத மாநிலம் ஆனது கோவா..!

Penbugs

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5735 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Three women’s cricketers from South Africa test positive for COVID-19 ahead of training camp

Penbugs

CPL 2020: Fabian Allen ruled out after missing his flight

Penbugs

Frances Tiafoe tests positive for Covid-19

Penbugs

COVID19: Children dig well to combat water crisis

Penbugs