தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிவர் புயல் மையம் கொண்டிருக்கிறது. இந்த புயல் அதி தீவிர புயலாக மாறிவிட்டது. இந்த நிலையில் புயலின் தன்மை குறித்து அறிய சேப்பாக்கத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நிவர் புயல் காரணமாக நாளை அரசு பொது விடுமுறை.
அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது. மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
புயலால் சாயும் மரங்களை அப்புறப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை மீட்கவும், உதவவும் ஏற்பாடுகள் தயார்
நிவாரண முகாம்களுக்காக கல்வி நிலையங்கள், திருமண கூடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
புயலை எதிர்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

Former Australian Cricketer Dean Jones passes away