Editorial News

தமிழகத்தில் இன்று 161 பேருக்கு தொற்று உறுதி…!

தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 2,162 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு ஆக 2,323 அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு 906 ஆக அதிகரித்துள்ளது.
இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 48. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,258. இன்று உயிரிழப்புகள் எதுவும் இல்லை. பலி எண்ணிக்கை 27 ஆக உள்ளது.

இதுவரை செய்யப்பட்ட 1,19,748 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனையில் இன்று மட்டும்9,787 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1,10,718 நபர்களுக்கும் இன்று மட்டும் 9,643 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மட்டும் புதிதாக 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,323 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று பாதிக்கப்பட்ட 161 பேரில் ஆண்கள் 97 பேர், பெண்கள் 64 பேர். மொத்தமாக பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் 1,553 பேர், பெண்கள் 770 பேர்.

தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 31,375. மேலும், 40 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் 34 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்கள் என 45 ஆய்வகங்கள் உள்ளன.

Related posts

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2396 பேர் பாதிப்பு

Kesavan Madumathy

TN Budget 2020 highlights: CCTV cameras to be fitted in all buses

Penbugs

COVID-19 Update: Tirupati Tirumala temple to be closed to visitors till March 31

Penbugs

சசிகலா விடுதலை …?

Penbugs

Kareena Kapoor-Saif Ali Khan expecting second child

Penbugs

Rachael Blackmore becomes first woman jockey to win Grand National

Penbugs

Javed Akhtar becomes 1st Indian to win Richard Dawkins award

Penbugs

Varalaxmi Sarathkumar on casting couch: Despite being a star kid, it happens to me

Penbugs

டெல்லியில் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படும்- நிபுணர்கள் எச்சரிக்கை

Kesavan Madumathy

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

Kesavan Madumathy

Chennai corporation makes wearing mask mandatory

Penbugs