கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள், தமிழக அரசு அனுமதியுடன் நாளை திறக்கப்படுகிறது.
அதே நேரத்தில் தியேட்டரில் படம் ஒளிபரப்புவதற்கான விபிஎப் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் கூறினர்.
இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் உள்ள 1,050 தியேட்டர்களை திறக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
புதிய படங்கள் திரையிடுவது உறுதி செய்யப்படாததால், லாக்டவுனுக்கு முன் வெளியான ‘’தாராள பிரபு’’, ‘’ஓ மை கடவுளே’’, ‘’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’’ ஆகிய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
திரையரங்குகளில் பின்பற்றும் விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். அதாவது ஒரு சீட் விட்டு ஒரு சீட்டில்தான் உட்கார வேண்டும். திரைப்படம் துவங்கும் முன்பும், இடைவேளையிலும் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்ப வேண்டும்.
திரையரங்கு உள்ளே சென்று உணவு, நொறுக்குத் தீனி வழங்க கூடாது. கேன்டீனில் சென்றுதான் நொறுக்கு தீனி வாங்க வேண்டும், அங்கும் கூட, பாக்கெட் உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும்.
ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் தியேட்டர்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்வோரின் விவரங்களை கட்டாயம் சேகரிக்க வேண்டும். அப்போதுதான், தியேட்டரில் வந்த யாருக்காவது, கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களை கண்டறிய முடியும்.
பணம் செலுத்தி கவுண்டர்களில் டிக்கெட் வாங்குவதை விட, டிஜிட்டல் முறையில் டிக்கெட் வாங்குவது நல்லது.
கூட்டத்தை குறைக்க, தியேட்டர்களில் டிக்கெட் கவுன்ட்டர்கள் நாள் முழுவதும் திறந்திருக்க வேண்டும். இவ்வாறு விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீட் புக்கிங் அமைப்பு :
