Editorial News

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றி சுகாதாரத் துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி:

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு மேலும் ஒருவர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர இன்று ஒருநாள் மட்டும் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,020 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோரில் ஆண்கள் 39, பெண்கள் 25.

அதேசமயம், சென்னையில் மட்டும் இன்று 28 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டி 523 ஆக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் புதிதாக 15 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரியில் முதன்முதலாக க
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியான நிலையில், அதுபற்றிய தகவல் இன்றைய பட்டியலில் இடம்பெறவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Change: Ella Jones becomes 1st black Mayor of Ferguson

Penbugs

எகிப்தில் அரங்கேறிய கொரோனா காதல்!

Anjali Raga Jammy

Genelia, Riteish pledges to donate their organs!

Penbugs

Vijay Mallya is not to be extradited soon: Reports

Penbugs

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

PM Modi on JNU attack

Penbugs

Racism is in cricket too: Chris Gayle

Penbugs

France’s International Space University pays tribute to Sushant Singh

Penbugs

Jharkhand CM urges BCCI to organize a farewell match for MS Dhoni

Penbugs

Chinese Billionaire Jack Ma suspected missing

Penbugs

Donald Trump reacts to Ayushmann’s Shubh Mangal Zyada Saavdhan

Penbugs

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.

Kesavan Madumathy