ஜனவரி 27 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுகிறது .
2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இருப்பதாகவும், பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம், அறிவுத்திறன் பூங்கா, நடைபாதை, புல்வெளி உள்ளிட்டவை 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நினைவிடம் பணிகள் நிறைவடைந்து அரசிடம் ஒப்படைக்கப்பட தயாராக இருக்கின்றது.
இந்நிலையில் ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு, விரைவில் திறக்கப்படும் என்றும் வரும்
ஜனவரி 27 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MS Dhoni was a special man in the run chase: Michael Holding