Penbugs
Editorial News

திருக்குறளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

அண்மையில் லடாக் சென்ற பிரதமர் மோடி, இந்திய வீரர்கள் மத்தியில் உரையாற்றியபோது, மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

இந்த உரை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், அதுகுறித்து தமிழில் வெளியான கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்டி, ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனடைவர் என நம்புவதாக, தமிழிலும், ஆங்கிலத்திலும் மோடி ட்வீட் செய்துள்ளார்.

Related posts

மோடி நல்லவா் என்று கூறினால் ரேஷன் பொருள் கிடையாது: காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சா்ச்சை

Penbugs

மே 3ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும்

Penbugs

புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் – திமுக தலைவர் ஸ்டாலின்

Penbugs

பிரதமர் வருகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Penbugs

பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய விராட்கோலி

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி லடாக்கில் திடீர் ஆய்வு

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Kesavan Madumathy

தோனி புதிய இந்தியாவின் அடையாளம்-பிரதமர் மோடி

Penbugs

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Kesavan Madumathy

தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Penbugs

Leave a Comment