Coronavirus

தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தொற்று இல்லா கேரளம்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவில் முதன் முதலில் கொரோனா தொற்று பதிவான கேரளாவில், கொரோனா பாதிப்பு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்கள் அல்லது அதற்கு சற்றும் கூடுதலான எண்ணிக்கையிலேயே இருந்தது. நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.

இந்த நிலையில், 2-வது நாளாக கேரளாவில் நேற்றும் புதிதாக கொரோனா நோய்த்தொற்று யாருக்கும் பதிவாகவில்லை. ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட 34 -பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒருநாளில் மட்டும் 61 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 462 பேர் குணமடைந்துள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நன்று, பரவும் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 61 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 34 பேர் மருத்துவனையில் உள்ளனர். புதிதாக ஹாட்ஸ்பாட்ஸ் ஏதும் இல்லை. 21,724 பேர் கண்காணிப்பில் உள்ளனர்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

US Open all set to happen in empty stadiums

Gomesh Shanmugavelayutham

Lives of many millions are in our hands: AR Rahman on COVID-19

Penbugs

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1443 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4% அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

Kangana Ranaut tested positive for coronavirus

Penbugs

Vemal volunteers as sanitary worker to help his village

Penbugs

தமிழகத்தில் இன்று 5859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம்

Kesavan Madumathy

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs