தொலைக்காட்சி வழிக் கல்வித் திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட உடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும். அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று ஐந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் திரு . கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:
கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு. எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. அரசு இதில் நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!