Penbugs
Cinema

வினோத் எனும் கதை படைப்பாளி.

சமகாலத்தில் இருக்கும் மிக முக்கியமான, படைப்புக்கேற்ற பாராட்டை பெற்றிடாத படைப்பாளிகளுள் ஒருவர், H. வினோத்.

நம்மை சுற்றி நடக்கும், பெருதும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும், நிகழ்வுகளை
வைத்து பாமர மக்களுக்கான படைப்பாக பதிவாக தருவதில் கைதேர்ந்தவர். சதுரங்க வேட்டை போன்ற நவீன காலத்து கொள்ளை பற்றியாகட்டும், பரம்பரை பரம்பரையாக அரசால்/அதிகாரத்தால் கொள்ளையில் ஈடுபட்டு வரும் குற்ற பரம்பரைகள் பற்றிய கதையாகட்டும், சரியான புரிதலோடு மக்களுக்கு சொல்லும் சமூக அக்கறை உள்ள வெகு சிலரில் முக்கியமானவர்.

உதாரணமாக, சதுரங்க வேட்டையில் வரும் உரையாடல்,

“கம்யூனிசம் னா என்ன?”

முதலாளி னு ஒருத்தன் இருந்தா தான் தொழிலாளி இருக்க முடியும்ங்றது முதலாளித்துவம்.
தொழிலாளினு ஒருத்தன் இருந்தா தான் முதலாளி இருக்க முடியும்ங்றது கம்யூனிசம்.

தலைவரே? அப்போ கம்யூனிஸ்ட் னா நல்லவர்களா?
“அது நீ இருக்க இடத்தை பொறுத்தது”

இப்போ நாம கம்யூனிஸ்டா? முதலாளித்துவாதியா?

முதலாளியாக முயற்சி பண்ற கம்யூனிஸ்ட்.

அதுபோல தன் படங்களில் கல்வியை பற்றியும்,
அதன் அவசியம் பற்றியும் எப்படியாவது ஓரிரு காட்சிகளில் காட்டி வருகிறார்.

படைப்பாளியாக சமூகம் சார்ந்த அக்கறையும்,
மக்களுக்கு தவறான வழியை/கருத்தை சொல்லாமல், தன் எழுத்தின் மூலமும் தான் கையில் எடுத்து இருக்கும் ஊடகம் வழியாக தன்னுடைய நிலைப்பாட்டை காட்டிக்கொண்டு வருபவர்.

இந்த காலத்திலும் ஆங்கிலம் கலக்காத தமிழை பேசும் வில்லன் என வித்தியாசமான குணாதிசயம் உடைய கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும்,
தயாரிப்பாளர் சார்பாக முன்வைக்க படும் வணிகம் சார்ந்த குறுக்கீடுகளையும் மக்களுக்கு சுவாரஸ்யமாக பரிமாறும் வித்தகர்(தீரன் படத்தின் climax காட்சியை ஒட்டி வரும் பாடல்/ நேர்கொண்ட பார்வை படத்தில் வரும் சண்டை காட்சிகள்)

“Money is always ultimate”

“No means No”

“மே பேகுன்னா சாப்”

போன்ற trademark வசனங்களுக்கு சொந்தகாரர்.

தனக்கு Pink ரீமேக்கை இயக்க வாய்ப்பு அளிக்க அழைத்தபோது, “இது என்னை விட பெண் இயக்குனர் ஒருவரால் இன்னும் சிறப்பா எடுக்க முடியும்” னு சொல்லி மறுத்தவரும் கூட.

இன்னும் வினோத்தின் படங்களையும், வினோத்தையும் கொண்டாட தமிழ் சமூகம் கடமை பட்டுள்ளது.

போஸ் வெங்கட் ஒரு உரையாடலில் குறிப்பிட்டதுதான் ஞாபகம் வருகிறது,
“அவர் இதுவரை எடுத்ததுலாம் sample தான். வினோத்தின் முழு திறமையும், அறிவும் இனி வரும் காலங்களில் தெரியவரும்”

வினோத் எனும் கலகக்காரன் இதுவரை எடுத்த படங்களை போலவே, இனி செய்யப்போகும் சித்திரங்களும் சாமானிய மக்களுக்கான அரசியலையும், அதிகாரத்தின்/ஆதிக்கவர்கத்தின் முகத்தை கிழித்தெறியும் என ஏகஎதிர்பார்ப்போடு
வலிமைக்காக காத்திருப்போமாக.

எளிய மக்களுக்கான வலிமையான அரசியல் பேசிக்கொண்டு இருக்கும் H. வினோத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Leave a Comment