Penbugs
CoronavirusCricketMen Cricket

வங்காளதேச கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு; ஐ.சி.சி. அறிவிப்பு

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் அடுத்த மாதம் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று ஐ.சி.சி. அறிவித்து உள்ளது.

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்து போட்டிகளில் விளையாட முடிவு செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக அணியின் இந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.

இதேபோன்று வரும் ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், கொரோனா பாதிப்பினால், இந்த தொடரை ஒத்தி வைப்பது என முடிவாகி உள்ளது.

இதுபற்றி வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி கூறும்பொழுது, கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள இந்த சூழ்நிலையில், வரும் ஆகஸ்டில் கிரிக்கெட் தொடருக்கு தயாராகி போட்டியை நடத்துவது என்பது சவாலானது. வீரர்கள், துணைநிலை ஊழியர்கள் மற்றும் அணி சார்ந்த நபர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த சூழலில், வங்காளதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவை போட்டி தொடரை ஒத்தி வைப்பது சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளார்

Related posts

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்துகொள்ள இணைய தள முகவரி அறிவிப்பு…!

Penbugs

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு

Kesavan Madumathy

ரம்ஜான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி…!

Penbugs

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

Penbugs

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு …!

Penbugs

முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு

Penbugs

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

புதுதில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

Penbugs