Coronavirus

நாடு முழுவதும் செப்-ல் கல்வியாண்டு : யூ.ஜி.சி. பரிந்துரை!

ஜூலையில் துவங்கும் கல்வி ஆண்டிற்கு பதிலாக செப்டம்பர் மாதத்தில் கல்வி ஆண்டை துவங்கலாம் என பல்கலைகழக மானியகுழு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக ஏப்.,மற்றும் மே மாதங்களில் நடைபெற இருந்த பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் மற்றும் நீட், ஜேஇஇ உட்பட பல்வேறு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை எப்போது துவங்குவது என்பது குறித்து ஆராய 7 பேர் கொண்ட இரண்டு கமிட்டிகளை பல்கலை மானிய குழு அமைத்தது. அதில் ஒரு குழு வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை ஜூலை மாதத்திற்கு பதிலாக செப்டம்பரில் துவங்கலாம் எனவும், நீட், ஜே.இ.இ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ஜூன் மாதத்தில் நடத்தலாம் என பரிந்துரைத்துள்ளது.

மற்றொரு கமிட்டி பல்கலைகழகங்கள்,கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதி இருக்கும் பட்சத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் எனவும், இல்லையெனில் ஊரடங்கு காலம் முடிந்த பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேரடி எழுத்து தேர்வாக நடத்தலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.

இதன் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் விரைவில் புதியஅறிக்கை வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

Related posts

Indian women’s football team excited for AFC Asian Cup finals

Penbugs

COVID19: Karan Johar to self isolate after 2 staffs tested positive

Penbugs

தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா..!

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 1974 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

Penbugs

தமிழகத்தில் 160 நாட்களுக்குப் பிறகு தொடங்கியது பேருந்து சேவை

Penbugs

COVID19 in Tamil Nadu: 669 new cases, 509 from Chennai

Penbugs

சென்னை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Penbugs

COVID19: Mom drives 1400km on scooty to bring her stranded son home

Penbugs

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31 தேதி வரை பொது முடக்கம்

Penbugs

Jofra Archer talks about unfair criticism and racist replies during lockdown

Gomesh Shanmugavelayutham