Cinema Coronavirus Inspiring

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் – ரகுமானின் வேண்டுகோள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது‌‌.

உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 25 கோடிப் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மது மற்றும் புகையிலைப் பொருட்களை உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், கஞ்சா, அபின், கோகைன், பிரவுன்சுகர் ஆகியவை கரையான் புற்று போல் இளைஞர் சமூகத்தை அழித்து வருகின்றன.

தனி நபரின் உடல், மனம் இரண்டையும் சிதைப்பதுடன், சமூகத்திற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன இந்த போதைப் பொருட்கள். இந்தப் பழக்கத்திலிருந்து மீளவே முடியாது என்ற சூழலில் தற்கொலைகளில் போய் முடிகின்றன.

உலகளாவிய ரீதியில் போதைப் பொருள் பயன்படுத்தல், போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை செய்தல் என்பன ஒரு முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்ட தினமாகவே உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் காணப்படுகிறது.

இதனை குறிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில் கொரோனா தொற்றியிருந்தது மீண்டு விடலாம் ஆனால் போதை மருந்து பழக்க அடிமையிலிருந்து மீள முடியாது என்று ரகுமான் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் போதை மருந்துகளை பயன்படுத்தாத வகையில் அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து மக்களின் உடல் நலனை காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ‌.

Related posts

Russia to register world’s 1st COVID19 vaccine in a few days: Putin

Penbugs

IND vs ENG- Rohit Sharma’s Masterclass

Penbugs

Sophie Devine smashes the fastest T20 ton in Women’s cricket

Penbugs

Body Bhaskar | Pilot Film | Review

Anjali Raga Jammy

Happy Birthday, Varalaxmi Sarathkumar!

Penbugs

Report: MS Dhoni delays his return to Ranchi, waits for all teammates to depart

Penbugs

என்றும் எங்கள் குஷ்பு..!

Penbugs

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

Penbugs

Taapsee slams media for calling Mithali Raj a Former Cricketer

Aravindhan

Marcus Rashford’s campaign raises funds for school children in UK

Gomesh Shanmugavelayutham

பெண்குயின் மூவி ரிவியூ….!

Shiva Chelliah

மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்

Penbugs