Coronavirus

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

நாடெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு குறித்து அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி பத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டில்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களின் கருத்துக்களை பிரதமர் மோடி மீண்டும் கேட்டறிந்தார்.

இதனையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், இன்று காலை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார் ‌.

ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கை :

ரூ.3000 கோடி உடனடியாக தேவை .

தமிழகத்தில் பிசிஆர் டெஸ்டுக்கான செலவின் 50 சதவீதத்தை பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து மத்திய அரசு வழங்க வேண்டும்.

உயர்தர வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் .

நவம்பர் வரை ரேசன் கடைகளில் வழங்க 55,637 மெட்ரிக் டன் பருப்பு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் .

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு 3000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் ‌.

ஜிஎஸ்டி வருவாய் குறைந்த காரணத்தினால் மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி ஒதுக்க வேண்டும் .

தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.1000 கோடியை உடனடியாக வழங்கவும் வேண்டுகோள்.

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்திற்கு ரிசர்வ் வங்கியின் சிறப்பு திட்டத்தின் SIDBI ரூ.1000 கோடியை வழங்க உதவ வேண்டும் .

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

Cannot dilute COVID protocols: Central asks TN Govt to follow 50% theatre occupancy

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 786 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

Kesavan Madumathy

COVID19: TN reports 203 new cases, 176 from Chennai

Penbugs

PM CARES fund does not come under RTI Act -Response to RTI filed by lawyer

Penbugs

தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகளுடன் கரோனா வகைப்படுத்துதல் மையம் திறப்பு

Penbugs

Vaccine registration for 18-plus to begin by April 24

Penbugs

Moeen Ali tested positive for COVID19

Penbugs

We commend your leadership: Bill Gates writes to PM Modi about COVID19

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2579 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

COVID19: Kurnool pays adieu to 2 Rs doctor Ismail

Penbugs

Leave a Comment