கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் ஆறு மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன.
இதனால் புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வந்தன. அடுத்ததாக சூர்யாவின் சூரரைப் போற்று வெளி வர இருக்கிறது.
மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
அந்த வகையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’
படம் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிட உள்ளதாக அந்த படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி அறிவித்துள்ளார்.
இந்த வருஷம் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள்..! 🙏#MookuthiAmman #DiwaliRelease on Disney Plus Hotstar Vip..! ❤️ pic.twitter.com/Vefv0NPhHl
— RJ Balaji (@RJ_Balaji) October 23, 2020