Editorial News

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் பாமக…!

அதிமுக – பாமக இடையிலான சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியது. இதன்மூலம், அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தை சென்னையிலுள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக அமைச்சர்கள், பாமக சார்பில் அன்புமணி, ஜி.கே. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடு எட்டியது.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில்

துணை முதல்வர் திரு ஓ. பன்னீர்செல்வம் கூறியது:

“அதிமுக தலைமையிலான கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.”

எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

Related posts

Man gives MP minister a hair cut on stage, awarded money to set up shop

Penbugs

Police inspector and 3 of his juniors booked for assaulting a woman in custody

Penbugs

டைம் பத்திரிகையின் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்கள் பட்டியலில், பிரதமர் மோடி

Penbugs

கண் தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

இருசக்கர வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டுக் கருவி: உயர் நீதிமன்றம் உத்தரவு

Kesavan Madumathy

கோயம்புத்தூர் சாந்தி சோசியல் சர்வீஸ்’ சுப்பிரமணியம் காலமானார்

Penbugs

Nigeria new law: Surgical castration, death penalty for rapists

Penbugs

அம்மா நகரும் நியாய விலைகடைகள் திட்டம் துவக்கம்

Penbugs

புதிய கல்வி கொள்கை ; இன்று கருத்து கேட்பு

Penbugs

யோனோ ஆப், நெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது – எஸ்பிஐ அறிவிப்பு

Kesavan Madumathy

Paava Kadhaigal Netflix: A strong attempt to document the sickening sides of society

Lakshmi Muthiah

Leave a Comment