Editorial/ thoughts

சென்னை..!

சென்னைக்கும் எனக்குமான புரிதல் என்பது வெறும் இரண்டு வரியில் சொல்லிட முடியாது..!

கிராமத்துல சின்ன வயசுல எல்லாரும் மெட்ராஸ் போய்ட்டு வந்து அதை பார்த்தோம் இதை பார்த்தோம் பெருமையா சொல்லிட்டு இருப்பாங்க என்னடா நம்ம ஊரை விட பெரிய ஊர் போல அதுனு மட்டும் தான் தோணும் அதுக்கு அப்பறம் கொஞ்சம் அறிவு தெரிய ஆரம்பிச்ச அப்ப நம்ம மாநில தலைநகரம் அங்க போனா எம்ஜீஆர் சமாதி பார்க்கலாம் இவ்ளோதான் முதல் அறிமுகம் .‌‌…!

கால ஓட்டத்தில் கல்லூரி வாழ்க்கை வந்த அப்பறம் மெட்ராஸ் வர்ற ஒரு வாய்ப்பு கிடைச்சது முதல் முறையா சென்னைக்கு பஸ்ல வந்து இறங்கிட்டு என்னடா இவ்ளோ சத்தமா இருக்குனு எப்ப பாருனு தோணுச்சு முதல் அனுபவமோ பஸ் மாத்தி ஏறிட்டு கண்டக்டர் அண்ணா ஓரெழுத்து கெட்ட வார்த்தையில் திட்டினதுதான் வளரந்த சூழல் காரணமாக என்னடா இங்க இவ்ளோ அசிங்கமா பேசறாங்க இந்த ஊர் சனங்க அப்படிதான் போலனு நினைச்சேன் …!

நம்ம சொந்த ஊரு விட்டு இங்கலாம் மனுசன் வாழ்வானானு கலாய்ச்சிட்டு ஊர் பக்கம் போன என்னை விதி மறுபடியும் சென்னைக்குதான் கூட்டிட்டு வந்துச்சு சரி இங்க வாழ்ந்துதான் பார்க்கலாம் என ஆரம்பிச்சேன். சராசரி அறிவில்லாத ஒரு இன்ஜினியரிங் மாணவன் எப்படி வேலை இல்லாம சும்மா இருப்பானோ அப்படிதான் இங்க நிறைய நாள் சும்மாதான் இருப்பேன். சரி, சும்மா இருக்கோம், இங்க வாழ்ற மனுசங்களின் வாழ்வியலை நோட்டம் போடலாம் என பாக்கும்போது பல நல்ல விசயங்கள் தென்பட்டுச்சு அதுல முக்கியமான ஒண்ணு அந்த ஓரெழுத்து கெட்ட வார்த்தை சாரி வார்த்தை இவங்க திட்ட மட்டும் பயன்படுத்தல அது அவங்க வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறின ஒண்ணு….!

அடுத்து வியந்த விசயம் ஆட்டோகார அண்ணாங்க காசு அதிகமாக கேட்டபாங்க , வண்டி தாறுமாறாக ஓட்டுவாங்க என்ற பொதுவான விமர்சனங்கள் தாண்டி, முன்ன பின்ன தெரியாத ஏரியாவில் நின்னு வழிகேட்டா எனக்கு இதுவரை சொல்லாம போன ஆட்டோகார அண்ணாவே கிடையாது அதுவும் தெரிலனா வேற‌யார் கிட்டனா கேட்டாச்சும் சொல்வாங்க , அடுத்து பெண்கள் கிட்ட நடந்துகிற விதம் சென்னையில் நான் பார்த்த வரைக்கும் நடு இரவில் கூட பெண்கள் ஓரளவிற்கு ஆட்டோவில் போறாங்கனா அது அவங்க நடந்துக்கிற விதம் நல்லா இருக்கும் .கூகுள் மேப் முக்கால் மணி நேரம் காட்டுன வழிக்கு எங்க ஆட்டோகார அண்ணா இரண்டு சந்துல வழி சொல்லி முடிப்பார் ஏன்னா நாங்க விஞ்ஞானத்து கூடவே வீம்பு பண்றவங்க …!

இதை தாண்டி எல்லாருமே அவங்க அவங்க வாழ்க்கைக்கு ஓடும்போது நாமளும் ஓடனும் என்ற எண்ணத்தை விதைக்க பல பேர் இங்க இருக்காங்க. ஏதோ ஏதோ ஊர்ல இருந்து வந்து தன் வீட்டுக்காக உழைக்கிற ஒவ்வொருத்தருக்கும் அடைக்கலம் தர்றது நம்ம மெட்ராஸ்தான்…!

காசு இருந்தா மால் போகலாம் , காசே இல்லயா கம்முனு பீச்ல போய் உக்காந்துடலாம் இங்க எல்லா நிதி நிலைகளுக்குமான கடைகள் , தியேட்டர் , பஸ் , ஆட்டோனு இருக்கு நீங்க ஆயிரம் கலாய்க்கலாம், தண்ணி பிரச்சினை வருது, இல்ல தண்ணி தேங்குது, எவ்ளோ நடந்தாலும் எங்க ஒண்ணா இருக்கனும் என இங்க இருக்கிற எல்லாருக்குமே தெரியும் பாஸ் …!

பத்து நாளில் சொந்த ஊர் ஆகிற வேற ஊர் எனக்கு தெரிஞ்சு சென்னை தவிர வேற இல்லை …!

இன்னும் பல லட்சம் பேர் கனவுகளுடன் வந்துட்டு , இங்க இருந்துட்டே சென்னையை திட்டிட்டு தான் இருப்பாங்க ஆனாலும் சென்னை வளந்துட்டேதான் போகும் ஏன்னா இது சிங்கார சென்னை…!

Related posts

Reality sucks

Penbugs

Friends in different phases of life

Penbugs

மனிதம்..!

Shiva Chelliah

IT HAS BEEN A YEAR SINCE HER DEATH!

Penbugs

கொரானாவை விட கொடியது இந்தியாவின் சமூக , வர்க்க கட்டமைப்பு

Dhinesh Kumar

Dear Chinmayi Akka…

Penbugs

TO ALL THE WOMEN OUT THERE

Penbugs

Naked

Penbugs

சமூக உரிமை புரட்சியின் தனல்! | Rosa Parks

Dhinesh Kumar

It was my first time

Penbugs

Let’s not over complicate things

Penbugs

மேதகு ஆளுநர் தமிழிசை

Kesavan Madumathy