இந்தியாவின் சமூக ,வர்க்க கட்டமைப்பு என்றுமே சமமாக இருந்தது இல்லை
பொதுமக்களுக்கே அத்தியாவசிய சேவைகளை வழக்கும் தூய்மைத் தொழிலாளர் வர்க்கம் வீட்டிலிருந்து வேலை செய்வதும் , அல்லது நெரிசலான பொது போக்குவரத்தை தவிர்ப்பது விருப்பம் இல்லை..

நகர்புற இந்தியாவின் ஒரு பெரும் பகுதி கொரோனா பரவலை கட்டுபடுத்த தன்னை தனிமை படுத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் தான் நாட்டின் மற்றொரு பெரும்பகுதியை சார்ந்த நீல நிற தொழிலாளர் வர்க்கம் சமூக விலக்கல் என்பது ஒரு ஆடம்பரம் ஆகும் !

தினசரி ஊதியம் பெறுவர்களும் ,அமைப்பு சாரா துறையில் இருபவர்களுக்கும் வேலையில்லாமல் இருப்பது பல நாட்கள் ” தட்டில் உணவு இல்லை என்பதாகும்”
எத்தனை பேரிடர் வரினும் எதுவம்
மாறவில்லை, சமூக கட்டமைப்பின் கொடூரம் தான் கழிவகற்றும் பணியை செய்ய ஒரு சமூகத்தை மட்டும் நூற்றாண்டுகளாய் தேர்ந்து விட்டு இருக்கிறோம்..

சமூக பொருளாதார வீழ்ச்சி
பொருளாதார ரீதியாக , ஊரடங்கு உத்தரவு, பயணத்தடை மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது முறைசாரா துறை தொழிலாளர்கள் ஊதியத்தை இழக்க கட்டாயப்படுத்தும்
சிறுகடை உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்களின் மந்தநிலையை நினைவூட்டும் , இழப்புகளை சந்திப்பார்கள்
தினசரி கூலி சம்பாதிப்பவர்களின் குடும்பங்கள் மேலும் வறுமையிலிட்டு செல்ல நேரிடும்.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டிலும் மற்றும் கூலி தொழிலாளர்கள் வேலையின்மையிலும் தள்ளபடுவர்.

*பொருளாதார மந்தநிலை
*வேலை வாய்ப்பு இன்மை தலைவிரித்து ஆடும் காலம் இந்த ஆண்டு தான்
*உலகளாவிய பசி குறியீட்டில் ( Global Hunger Index) இந்தியாவின் தரவரிசை 102 உள்ளது.

இவ்வாறு எதையும் எடுத்து கொள்ளாமல் திட்டமிடப்படாவிட்டால் இந்த தொற்றுநோய் பொருளாதார பேரழிவாக மாறும்!!
கொரோனா-வை விட அதிக உயிர்களை கொன்று குவிக்க வாய்ப்பு…
நகர்ப்புறவாசிகளின் தற்போதைய நயப்புப் போக்காக மாறியிருக்கும் கை சுத்திகரிப்பான்(Hand sanitizer)பற்றாக்குறை, குறித்து வெளிப்படுத்தப்பட்ட பொதுவெளி அறச்சீற்றத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் இவர்கள் குறித்தும் வெளிப்பட்டிருந்தால் இந்த நாடு எப்போதோ மனிதத்தன்மை பெற்றிருக்கும்.
(We don’t own the copyrights for the images)