Penbugs
Cinema

டான் திரைப்படம் எப்படி உள்ளது?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள டான் திரைப்படம் வெளியாகி உள்ளது.

டாக்டர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் அவர்களின் படம் வெளி வருவதால் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சிவகார்த்திகேயன் தனக்கென்று உருவாக்கிய ஆடியன்ஸ் கூட்டத்திற்காக தன்னுடைய பலமான ஹீயூமரை‌ நம்பி இந்த படத்தை தந்துள்ளார்.

இன்றைய கால பொறியியல் படிப்பையும், கல்லூரிகளையும், அதில் படிக்கும் மாணவர்களையும், சில பெற்றோர்களின் ஆசைகளையும் வைத்து ஒரு திரைக்கதையை இயக்குனர் சிபி அமைத்துள்ளார்.

பெற்றோர் ஆசைகளுக்காக இஞ்சினியரிங் படிக்க வரும் ஒரு மாணவன், மிகவும் கண்டிஷனாக நடந்து கொண்டால்தான் நல்ல கல்லூரி என தமிழ்நாட்டில் படித்து /படித்து கொண்டிருக்கின்ற / படிக்க போகின்ற பல பொறியியல் மாணவர்களின் நிலையை தெளிவாக கூறியுள்ளார் இயக்குனர் சிபி.

படத்தின் முதல் பாதியில் ஏற்கனேவே பலமுறை பார்த்த காட்சிகள் வந்தாலும் தியேட்டரில் கைதட்டடல்களும் , சிரிப்பு சத்தங்களும் தெறிக்கின்றன.

படத்தின் இறுதி அரை‌ மணி நேரம் படத்தை முழுவதுமாக காப்பாற்றி விடுகிறது‌. சமுத்திர கனி – சிவகார்த்திகேயன் சென்டிமென்ட் காட்சிகள் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது.

பெற்றோர்களின் கண்டிப்பு குழந்தைகளின் நன்மைக்காக மட்டுமே என்று கருத்துடன் சில சில நகைச்சுவை காட்சிகளை சேர்த்து கோர்வையாக தந்துள்ளார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.

படத்தின் வெற்றி தோல்வியை தாண்டி சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது ‌.குடும்பம் குடும்பமாக தியேட்டரை நோக்கி வர வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

ப்ளஸ் :

  • சிவகார்த்திகேயனின் துறுதுறு நடிப்பு
  • ஜலபுல ஜங்கு பாடலின் நடனம்
  • படத்தின் இறுதி அரை மணி நேரம்
  • சில சில ஒன் லைனர்கள்
  • சமுத்திரகனியின் நடிப்பு

மைனஸ் :

  • காலேஜ் காட்சிகள் சில இடங்களில் சலிப்பை தருவது
  • பல நடிகர்கள் இருந்தாலும் சிவ கார்த்திகேயன் மற்றும் சமுத்திர கனியின் நடிப்பு மட்டும் திரையில் தெரிகிறது.

Leave a Comment