வீரனுக்கு வெற்றி மட்டும் தான் என்னைக்கும் மனசுக்குள்ள ஒரு புதிய உத்வேகத்தையும் வெறியையும் கொடுக்கும்,ஆனா அந்த தொடர்ச்சியான வெற்றிய அந்த வீரன் இப்போ உணருற தருணத்துல அவன் அதுக்கு முன்னாடி கடந்து வந்த பாதை பத்தி பேசணும்,அப்போ தான் அந்த வெற்றிக்கான தகுதிக்கு அவன் எவளோ உழைச்சுருக்கான்னு உலகத்தின் வெளிச்சத்துக்கு வரும்,
ப்ரித்வி ஷா – எழுந்து வா எம் வீரனே
இது போன ஐ.பி.எல் சீசன்லயும் சரி ஆஸ்திரேலியா டெஸ்ட்லயும் சரி ப்ரித்வி தொடர்ந்து சொற்ப ரன்களில் அவுட் ஆனப்போ அவர் பற்றிய தரக்குறைவான ட்ரோல் மீம்ஸ்ன்னு சமூக வலைதளம் முழுக்க அவர் பிரியாணி சாப்பிடத்துல இருந்து பூஜியம்ல அவுட் ஆன வரை திரும்பும் திசை எங்கும் தரக்குறைவான விமர்சனங்களும் மீம்ஸ்களும் சரமாரியாக வந்தன,அப்போது ப்ரித்விக்காக நான் எழுதிய ஆர்டிகிள் லிங்கையும் இங்கே இணைத்துள்ளேன்,
மனுஷ உயிர் வாழுறதுக்கு சாப்பாடு தான் மூலாதாரமே,சில பேர் கம்மியா சாப்பிடுவாங்க சில பேர் நிறைய சாப்பிடுவாங்க,உணவே மருந்துன்னு நம்ம பெரியோர்கள் சொல்லி இருக்காங்க,பசில சாகுறது தான் உலகத்துலயே கொடுமையான இறப்பு,நம்ம வீட்டுக்கு வரவங்களுக்கு வயிறார சாப்பாட்டு போட்டு அனுப்புற வம்சம் நம்ம,அப்படி இருக்கப்போ நம்ம இன்னொருத்தர் சாப்பிடுறத வச்சு தரக்குறைவாக கிண்டல் செய்யுறப்போ நம்ம மனசாட்சிக்கு கொஞ்சம் உண்மையா இருந்தா நல்லாருக்கும்,
இவ்வளவு ஏன் இன்னக்கி ப்ரித்வி நல்லா விளையாண்டப்பவும் சாப்பாடு போஸ்ட் போட்டு சாப்பாடு தீரப்போது சீக்கிரமா அவுட் ஆகிட்டு போங்க ப்ரித்வின்னு ட்ரோல் போஸ்ட் போட்டவங்களும் இங்க இருக்காங்க,எவளோ பெரிய நெகட்டிவிட்டியான உலகத்துக்குள்ள நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம்ன்னு இது பார்த்தாலே புரியும்,ஒருத்தன் கீழ விழுகுறப்போ அவன கை கொடுத்து தூக்கி விட வேணாம் மிதிச்சு கீழ தள்ளாம இருந்தாலே போதும்,அவனே தட்டி தடுமாறியாச்சும் மேல ஏறி வந்துருவான்,
விஜய் ஹஸாரே தொடர்ல எங்க வீரன் எழுந்து வர ஆரம்பிச்சான்,இன்னக்கி ஐ.பிஎல் முதல் போட்டியில ஒரு சிறப்பான தரமான சம்பவம் செஞ்சுட்டு போயிருக்கான்,Proper Cricket Shots & Placement of Ball – ன்னு இன்னக்கி பிரித்வியோட ஆட்டம் நம்ம மீம்ஸ் பாஷைல சொல்லணும்ன்னா அமுக்கு டுமுக்கு அமால் டுமால் தான்,
ஆமா,எங்க வீரனுக்கு ரொம்ப பசி,ரன் வேணும் அவனுக்கு,அப்படி ஒரு பசில இருக்கான்,இது இன்னையோட முடியப்போறது இல்ல,பசிக்கு தீனி போட்டுக்கிட்டே இருக்க தயார் ஆகிக்கோங்க,இந்த வேட்டை தொடரும்,
இது சுட்டி (ப்ரித்வி) வெர்சன் 2.0..!!! 💙