Cinema

ஹிப்ஹாப் ஆதி…!

பொதுவா இசையில் ஆர்வம் இருந்து ஆனா முறையா சங்கீதம் கத்துக்காம இசையில் ஏதாவது செய்யனும் என்று நினைக்கிற இளைஞர்களுக்கு பெரிய முன்னோடியா ஆதிதான் இருக்கிறார்.

புதுவிதமான ட்ரெண்டோட தமிழ்சினிமா உள்ள வர்றது பெரிய விஷயமில்ல வந்தவங்க ஒன்னு ரெண்டு படத்தோட காணாம போய்ருவாங்க ஆனா ஆதி அப்படி இல்லை உடனடியா ஒரு ஹிட் அது சோசியல் மீடியாவில் வைரல் ஆகனும்னா அது ஆதிதான் இப்ப சேப் பெட் ..!

பாட்டு எல்லாத்தையும் கையில வச்சிக்கிட்டு அலைஞ்ச ஆதிக்கு ஒரு ரேடியோல அத பாடிக்காட்டற வாய்ப்பு கிடைக்குது. தனக்கு வர்ற ஒரு சின்ன வாய்ப்பை கூட எப்படி பயன்படுத்திக்க வேண்டும் என்பதற்கு ஆதியே ஒரு சான்று …!

சாதாரணமா ஆல்பம் சாங்கோட உள்ள வந்த ஆதி இப்ப ரவி , விஷால் விஜய்சேதுபதி மாதிரி பெரிய நட்சத்திரங்களோட படத்துக்கு இசையமைக்கிற அளவுக்கு வளந்துருக்கார்னா அது சாதாரண விஷயமில்லைன்றதுதான் உண்மை.

பாட்டும் எழுதி அதுக்கு இசையமைச்சு அத பாடவும் செஞ்சு ஒரு தனி இடத்த குறுகின காலத்துலயே பிடிச்சிருக்கார்ன்றது மிகப்பெரிய விஷயம். நடிக்கவும் வந்து அதுலயும் ஒரு அளவுக்கு நிற்கிறார்ங்கிறதும் ஆச்சர்யத்துல ஒன்னுதான்…!

குறைந்த பட்ஜெட் , எளிமையான கதை , சரியான திட்டமிடல் இது மூனும் வைச்சிகிட்டு தன்னுடைய நட்பு வட்டத்தையும் விட்டு தராமல் உழைப்பை உண்மையாக தந்துட்டு இருப்பதால்தான் ஹாட்ரிக் வெற்றியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் …!

இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா மாதிரி தமிழுக்கான வார்த்தைகளை தன்னோட பாடலில் உபயோகிப்பது , முடிந்த அளவு பாரதியாரை முன்னிருத்திக்கறது, லோகோ டிசைன்ல பாரதியார் முகம், ஆல்பம் சாங்ஸ்ல சமூக கருத்துனு புதுசாவே டிரை பண்ணிட்டு இருக்கிற ஒரு இளம் ரத்தம் ஆதி ‌.‌..!

இன்னும் நல்ல பெரிய வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள் …!

Related posts

21 day lockdown: Pornhub records 95% increase in Traffic from India

Penbugs

Vishnu Vishal and Jwala Gutta are engaged

Penbugs

Teaser of Keerthy Suresh starrer Penguin is here!

Penbugs

Leaving my job for cinema was the bravest decision I took: Nivin Pauly

Penbugs

STR out of ‘Maanadu’ movie

Penbugs

1st wax statue of Sushant Singh unveiled at West Bengal’s Asansol

Penbugs

Thangar Bachan: An alcove in the garden of Tamil cinema

Lakshmi Muthiah

A R Rahman’s word about #MeToo

Penbugs

COVID19: Akshay Kumar donates Rs 2 crore to Mumbai Police

Penbugs

Katrina Kaif helps 100 background dancers to get back on feet

Penbugs

அமைச்சரிடம் ஸ்டாலின் நலம் விசாரிப்பு …!

Kesavan Madumathy

Mani Rathnam- The Ayutha Ezhuthu of Indian Cinema

Penbugs