Coronavirus

தமிழகத்தில் மதுபான விலை ரூ.20 வரை உயர்வு – டாஸ்மாக் அறிவிப்பு

மதுபாட்டில் விலை ரூ.20 வரை உயர்த்தியுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தியுள்ள காரணத்தினால், சாதாரண வகை 180 மி.லி மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் 07.05.2020 முதல் உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய பாதுகாப்பு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழகத்தில் இன்று 5596 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

UK’s patient recovers from COVID19 after 130 days in hospital

Penbugs

தமிழகத்தில் இன்று 5752 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

Would’ve loved to play IPL 2020 in India: RR skipper Steve Smith

Penbugs

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

Penbugs

பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டது ரஷ்யாவின் ஸ்புட்னிக் -V தடுப்பூசி

Penbugs

Trichy: Police helps pregnant woman deliver baby by donating blood

Penbugs

World No. 2 Simona Halep to skip US Open

Penbugs

List of containment zones declared by GCC

Penbugs

COVID19: 70YO Man beats COVID19 in 62 days, gets $1.1 Million hospital bill

Penbugs