இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 54, 736 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியது.
நேற்று ஒரே நாளில் 51,256 பேர் குணமடைந்ததை தொடர்ந்து மொத்தம் 11.75 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 2.15 சதவீதமாகவும், குணமடைபவர்களின் சதவீதம் 64.53 சதவீதமாகவும் உள்ளது.
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-
அமெரிக்கா – 23,61,359
பிரேசில் – 18,84,051
இந்தியா -11 ,75,374
ரஷியா – 6,46,524
தென் ஆப்ரிக்கா – 3,42,461
சிலி – 3,30,507
பெரு – 2,87,127
மெக்சிகோ – 2,78,618
ஈரான் – 2,65,830
Jofra Archer talks about unfair criticism and racist replies during lockdown