கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்வதாக கூறியுள்ளார்.
கண்தானம் செய்ய விரும்புவோருக்கு உதவிடும் இணையதளத்தையும் அவர் துவக்கி வைத்தார்.
இறப்புக்குப் பிறகு கண்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் கண் தானத்தின் மூலம், பார்வையிழந்தவர்கள் புதுவாழ்வு பெறுகிறார்கள்.
அந்த வகையில் கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், தனது இரு கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கண்தானம் செய்ய விரும்புவோருக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்ட https://www.hmis.tn.gov.in/eye-donor/ இணையதளத்தையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் கண்தானம் செய்ய விரும்புவோர் குறித்த பதிவேட்டினை ஏற்படுத்தும் வகையிலும் https://www.hmis.tn.gov.in/eye-donor/ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
Former Australian Cricketer Dean Jones passes away