குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமரின் பயன்பாட்டுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏர் இந்தியா ஒன் போயிங் விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.
இந்தியாவில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் வெளிநாடு பயணங்களுக்கு ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விவிஐபி விமானங்களை போலவே, இந்தியா தலைவர்களுக்கு விமானங்கள் வாங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.
அதன்படி, அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட போயிங் 777-300 ER ரக இரண்டு விமானங்களை போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், விவிஐபி ஏர் இந்தியா ஒன் ரகத்தின் முதல் விமானம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்டு, 13 ஆயிரம் கிலோ மீட்டர் இடைநிறுத்தாமல் டெல்லி வந்தடைந்தது.
சிறப்பம்சங்கள் :
143 டன் எடை கொண்ட இந்த விமானம் 43,100 அடி உயரம் வரை பறக்கும்
திறன்கொண்டது.
படுக்கை அறை, கூட்ட அரங்கு, மருத்துவக்குழு தங்கும்
அறை, அறுவை சிகிச்சை அறை, சமையல் அறை, பாதுகாப்பு வீரர்கள்
தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
பிரமாண்டமான இந்த விமானத்தில் GE90-115BL இரட்டை இன்ஜின்கள்
பொருத்தப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய விமான எஞ்சின்களில் இந்த
ரகமும் ஒன்று.
அமெரிக்க அதிபருக்காக பயன்படுத்தப்படும் போயிங் 747-200பி விமானத்தில்
இருக்கும் அதே ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு கவச தொழில்நுட்பம் இந்த
இரண்டு விமானங்களிலும் கொடுக்கப்பட இருக்கிறது.
ஏர் இந்தியா ஒன் விமானத்தின் ஸ்பெஷலே ஏவுகணையால் அதைச்
சுட்டுவீழ்த்த முடியாது.
இந்தியாவில் (SPS)
தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட முதல் இந்திய விமானங்கள் இவைதான்.
இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டால், எதிரிகளின் ரேடார்களைச்
செயலிழக்க வைக்கமுடியும்.
US: JK Rowling’s book sales sees low after “transphobic” comments