Penbugs
Editorial News

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேர்தலில் வெற்றி பெற வீர சபதம் ஏற்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் நாள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் தமிழக அரசு சார்பில் எண்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் காலை முதலே மெரினாவில் அலை அலையாக திரண்டனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் நினைவிடத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்தார். பிறகு ரிப்பன் வெட்டி நினைவிட வளாகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் மலர் வளையம் வைத்தும், ஜெயலலிதா முழு உருவப்படத்துக்கு மலர் தூவியும் வணங்கி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர்பின் ஒருவராக ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்வையிட்டுச் சென்றனர்.

நிகழ்ச்சயில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேர்தலில் வெற்றி பெற வீர சபதம் ஏற்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

விழுப்புரம்: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Penbugs

விழுப்புரம் சிறுமி கொலை: முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்!

Penbugs

பாமக முதற்கட்டமாக 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் – சசிகலா அறிவிப்பு

Kesavan Madumathy

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

Penbugs

திறக்கப்படும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடம்

Kesavan Madumathy

தமிழகம் முழுவதும் Friends of Police அமைப்புக்கு தடை

Penbugs

ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆகிறார் சசிகலா

Penbugs

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

Penbugs

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

Penbugs

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி

Penbugs

Leave a Comment