ஊர்களின் பெயரை, தமிழ் உச்சரிப்பில் இருப்பதுபோல், ஆங்கிலத்திலும் மாற்றலாம்’ என்று அரசுக்கு, தமிழ் வளர்ச்சித்துறை பரிந்துரைத்துள்ளது.
சில ஊர் மற்றும் வீதிகளின் பெயர்கள், தமிழில் ஒன்றாகவும், ஆங்கிலத்தில் வேறாகவும் இருக்கும். இந்த வித்தியாசம் காரணமாக, அங்கு வசிப்பவர்களுக்கு பல்வேறு வகையிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, முகவரி குளறுபடியால், அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழ் உச்சரிப்பில் இருப்பது போலவே, ஆங்கிலத்திலும் ஊர் பெயர்களை மாற்ற, அரசு உத்தரவிட்டது.
அதற்காக அரசாணை தமிழக அரசால் இன்று வெளியிடப்பட்டது .



