Penbugs
Editorial News

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓபிஸ்

தமிழக இடைக்கால பட்ஜெட் 2021 – முக்கிய அம்சங்கள்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 2021-22ன் பல்வேறு முக்கிய அறிவிப்புகள்:

தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு – ஓபிஎஸ்

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி நிதி ஒதுக்கீடு.

அடுத்து சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

இதில் 2 ஆயிரம் பேருந்துகள் மின்சார பேரூந்துகளாக இருக்கும்.

முதல்கட்டத்தில் 2,200 பிஎஸ் 6 பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

ரூ1,580 கோடியில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

2020-21 ஆம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும்.

மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மின்துறைக்கு ரூ.7,217 கோடி, உயர்கல்வித்துறை ரூ.5,478 கோடி நிதி ஒதுக்கீடு.

நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதி பற்றாக்குறையை தவிர்க்க இயலாது என ஓபிஎஸ் திட்டவட்டம்.

கொரோனா வாராந்திர தொற்று 1%க்கும் குறைவாகவே உள்ளது.
கொரோனா நோய் தொற்று இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.
1.68 கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ13,352 கோடி ஒதுக்கீடு.

ஒப்புதல் தரப்பட்ட அனைத்து பணிகளையும் நிறைவேற்ற 2021-22 ஆம் ஆண்டில் தேவையான நிதி ஒதுக்கப்படும்.

வேளாண்துறை ரூ.11,982 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழக தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி நிதி ஒதுக்கீடு.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,700 கோடி நிதி ஒதுக்கீடு.

உள்ளாட்சி துறைகளுக்கு ரூ.22,218 கோடி நிதி ஒதுக்கீடு.

நீர்வள துறைக்கு ரூ.6,453.17 கோடி நிதி ஒதுக்கீடு.

காவல்துறைக்கு ரூ.9,567 கோடி நிதி ஒதுக்கீடு.

நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ.1,437 கோடி ஒதுக்கீடு.

மீன்வளத்துறைக்கு ரூ.580 கோடி நிதி ஒதுக்கீடு.

நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி நிதி ஒதுக்கீடு.
பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

6 முதல் 10 வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம் – ஓபிஎஸ்

தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீடு 26.69% ஆக இருக்கும் – ஓபிஎஸ்

தீயணைப்பு மீட்டுத்துறைக்கு ரூ.4,436 கோடி நிதி ஒதுக்கீடு.

குடும்ப தலைவர் விபத்தில் மரமடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும்.

நகர்ப்புற வடிகால் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி நிதி ஒதுக்கீடு.

ஸ்மார்ட் சிட்டி ரூ.2,350 கோடி நிதி ஒதுக்கீடு.

ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.22,218.58 கோடி நிதி ஒதுக்கீடு.

கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,548 கோடி நிதி ஒதுக்கீடு.

ஊரக சாலை திட்டத்துக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு.

ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.1,932 கோடி நிதி ஒதுக்கீடு.

சமூக நலத்துறைக்கு ரூ.1,953 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழகத்தில் 6 புதிய மாவட்டங்கள், 18 வருவாய் கோட்டங்கள் உருவாக்கம் – ஓபிஎஸ்

கைத்தறி துறைக்கு ரூ.1,224.26 கோடி நிதி ஒதுக்கீடு.

காவல்துறையை நவீனமயமாக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கீடு.

சென்னை மாநகர தனித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் திட்டத்திற்கு ரூ.3,140 கோடி நிதி ஒதுக்கீடு.

அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி நிதி ஒதுக்கீடு.

15.25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,715 கோடி நிவாரணம்.

இயற்கை பேரிடர்: 1 ஹெக்டேருக்கான நிவாரண தொகை ரூ.13,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு – ஓபிஎஸ்
அம்மா மினி கிளினிக் திட்டத்துக்கு ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு.

55.67 லட்சம் ஏழை குடும்பங்களில் குடும்பத் தலைவர் இயற்கை மரணமடைந்தால் ரூ.2 லட்சம் நிதி உதவி – ஓபிஎஸ்

கால்நடைகளுக்கு நடமாடும் அம்மா அவசர வாகன சேவை தொடக்கம்.

71,766 பேருக்கு வேலை வழங்க ரூ.39,941 கோடியில் 62 முதலீடுகளுக்கு விரைவில் அனுமதி – ஓபிஎஸ்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் மானியம் குறைப்பு.
40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும். குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு ரூ3,016 கோடி நிதி ஒதுக்கீடு.

2749 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு ரூ144.33 கோடி நிதி ஒதுக்கீடு.

Related posts

Jehan Daruvala becomes 1st Indian to win F2 race

Penbugs

TN man uploads wife’s private photos on social media demanding dowry, arrested

Penbugs

“This is what I want for my birthday” PM Modi writes

Penbugs

I may be the 1st woman in this office, I will not be the last: Kamala Harris

Penbugs

Donald Trump calls India’s air quality as filthy

Penbugs

Well done Rafa, you deserve it: Roger Federer

Penbugs

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs

Ritika Phogat, cousin of Geeta Phogat dies

Penbugs

TANGEDCO announces Power cut in few areas on January 25

Penbugs

மத்திய பட்ஜெட் அறிவிப்பு ; தமிழகத்திற்குபுதிய திட்டங்கள்

Penbugs

58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மோடி

Penbugs

Syed Mushtaq Ali T20 Trophy | BRD vs GUJ | Elite Group C | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

Leave a Comment