Coronavirus

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்: 5 ஆவது இடத்தில் இந்தியா !

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுகளின் அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 9,887 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 294 நபர்கள் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கையின் மூலம் இந்தியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2,36,657 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 6,642 ஆகவும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 2,739 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 120 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 82,968 ஆகவும் இறப்பு எண்ணிக்கையானது 2,969 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

மகாராஷ்டிராவை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 28,694 அதிகரித்துள்ளது.

கொரொனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்தை தொடர்ந்து இந்தியா வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Actor Aishwarya Arjun tested positive for coronavirus

Penbugs

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பா? வரும் 27 ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Penbugs

இ பாஸ் தளர்வுகள் மேலும் அறிவிப்பு

Penbugs

இன்று ஒரே நாளில் 5723 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Penbugs

இந்திய நிறுவனங்களை வாங்க சீனா முயற்சி: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

Penbugs

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

தமிழக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு ; நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

Kesavan Madumathy

தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா

Kesavan Madumathy

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை

Penbugs

தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மையம் துவங்க சென்னை மாநகராட்சி அனுமதி

Penbugs

PCB conducts COVID19 tests once again, 6 out of 10 cricketers tests negative!

Penbugs