Editorial News

விழுப்புரம்: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

விழுப்புரம் அருகே இரு தரப்புக்கு இடையிலான முன்விரோதத்தில் 15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக முன்னாள் அதிமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமதுரையைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது தம்பி குமார் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளாகவே விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் முருகனின் உறவினரான பிரவீன்குமார் என்பவர் ஜெயபாலின் மகன் ஜெயச்சந்திரனை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஜெயபால் திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமைடந்த முருகனும் அவனது உறவினரான கலியபெருமாள் என்பவரும் சேர்ந்து 10ஆம் வகுப்பு படித்து வரும் ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. 80 விழுக்காடு காயங்களுடன் ஜெயஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முருகனையும் கலியபெருமாளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் அந்த சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணம்.

சிறுமியின் குடும்பத்தினரோடு இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது

Related posts

Badshah accused of buying fake YT views for 72 lakh, rapper denies claims

Penbugs

Donald Trump reacts to Ayushmann’s Shubh Mangal Zyada Saavdhan

Penbugs

Racism: TN forest minister under fire after making tribal children remove his slippers

Penbugs

ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.7,500; மத்திய அரசுக்கு காங்., குழு சிபாரிசு

Penbugs

Tired of cyber bullying, Stardom wrestler Hana Kimura dies at 22

Penbugs

Collector, SP removed after dalit farmer couple consume poison in Madhya Pradesh

Penbugs

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் இன்று திறப்பு

Kesavan Madumathy

மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்- தமிழக அரசு

Penbugs

Corona updates: TN crosses 24000, 1091 cases today

Penbugs

Greater Chennai Corporation creates new Hashtag to address fake news

Penbugs

Netflix series My Secret Terrius ‘predicted’ coronavirus pandemic

Penbugs