Penbugs
Cinema

வினோதய சித்தம் விமர்சனம்

இயக்குனர் சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் வினோதய சித்தம்.

இந்த படத்தில் தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ளார்.

இந்த படம் நேரடியாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

ஓடிடி தளங்களுக்காகவே படம் எடுத்து அதை வெளியிடுதல் மலையாள சினிமாவில் வழக்கமாக இருக்கும் நிலையில் தமிழ் சினிமா மெல்ல மெல்ல தனது கவனத்தை அதனை நோக்கி திரும்பியுள்ளது.

குறைந்த பொருட்செலவில் குறைந்த நடிகர்களோடு நிறைவான படமாக வினோதய சித்தம் வெளியாகியுள்ளது.

படத்தின் கதை ..?

கதையாக சொன்னால் படத்தின் சுவாரஸ்யங்கள் குறைந்து விடும்.

பிற மொழிப் படங்களில் பீல் குட் திரைப்படங்களை காணும்போது தமிழில் அந்த அளவிற்கு இல்லாமல் விரல் விட்டு எண்ண கூடிய கதைகளே வருகின்றதே என்ற வருத்தம் உள்ளது.அந்த வருத்தங்களை நீக்கும் மருந்தாக வினோதய சித்தம் உள்ளது.

தனது அறிவுரைகளால் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் மெட்டீரியல் ஆக மாறிய சமுத்திரகனி இயக்கிய இந்த‌‌ படத்தில் நிச்சயம் ஒரு இடத்திலாவது அட சொல்ல வைத்து விடுவார்.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் படத்தின் வசனங்கள் ஸ்ரீவட்சன், விஜி, சமுத்திரகனி ஆகிய மூவரும் இணைந்து வசனம் எழுதி இருக்கிறார்கள்.

அன்றாட வாழ்க்கையோடு கலந்த வசனங்களும் , ஆங்காங்கே வெடிக்கும் நகைச்சுவை வசனங்கள் ஒவ்வொன்றுமே ரசிக்க வைக்கிறது.

தம்பி‌ ராமையா இந்த மனுசனை என்னனு சொல்றது கிடைச்ச வாய்ப்புகளில் எல்லாம் தனியா தனது நடிப்பில் கவர்நது விடுகிறார்.படத்தின் கதை மாந்தர்கள் தேர்வில் தம்பி‌ இராமையாவை தேர்வு செய்ததில் படத்தின் பாதி வெற்றி.

“யார் இருந்தாலும்‌ இல்லையென்றாலும் இந்த உலகம் இயங்கி கொண்டேதான் இருக்கும் “

படத்தின் ஒன்லைன் இதுதான் …!

அதை காட்சியமைத்த விதமும் , போரடிக்காமல் இருக்கும் திரைக்கதையும் , வசனங்களும் மீண்டும் மீண்டும் காணுகின்ற படமாக வினோதய சித்தம் உள்ளது.

நிறைய கேள்விகளை இந்த படம்‌ நமக்குள் எழுப்பும் அதுவே இந்த படத்தின் வெற்றி ..!

Related posts

சில்லுக் கருப்பட்டி – Review

Anjali Raga Jammy

Leave a Comment