Editorial/ thoughts Short Stories

World Tea Day..!

தேக்கமான ஜென் மனநிலை
என்ன செய்வதென புரியவில்லை
தலை சுற்றுகிறது குழப்பத்திலே
நானோ குறுகிய மன நிலையில்,

அன்று விரல்களில் நீ அகப்பட்டாய்
என் உணர்வுக்கு மரியாதை தந்தாய்
என் உதடுகளை சில நேரம் சுட்டாய்
பெரிதான காயமாய் தெரியவில்லை,

மூட்ஸ்விங்க்கான நிவாரணியாய் வந்தாய்
பல நேரம் புத்துணர்ச்சியை தந்தாய்
சக தோழன் போல் பயணம் செய்தாய்
என் இதழ்களில் சிரிப்பை விதைத்தாய்,

மழையிலும் நீ வந்தாய்
வெயிலிலும் துணை நின்றாய்
குளிரிலும் குதூகலம் அடைய செய்தாய்
இலையுதிர் மாலையிலும் சுகம் தந்தாய்,

Read: https://penbugs.com/theaneer-kadai/

நிறைய வலிகளை பார்த்தவன்
என் வலிகளில் உடன் நின்றாய்
நீயே அர்த்தமுள்ள உயிரானாய்
நித்தம் என் குருதியில் கலந்தாய்,

அந்தி மாலை நேரமோ
அதிகாலை பொழுதோ
அக்னி வெயில் சுடும் பகலோ
அடர்ந்த இருள் படர்ந்த இரவோ
ஒரு கோப்பை உனை நான்
கையில் ஏந்தினால் தான்
அன்றைய நாள் எனக்கு வசந்த நாள்,

Picture Credits : Prashanth Devaraj

WorldTeaDay | #TeaForLife ❤️

Related posts

IT HAS BEEN A YEAR SINCE HER DEATH!

Penbugs

Barty- a hero. Flawed. Superhero

Penbugs

World Suicide Prevention Day: When I tried to end my life!

Penbugs

Paris belongs to Nadal!

Penbugs

கரைகின்ற நொடிகளில்..!!

Shiva Chelliah

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Penbugs

ஆட்டோ டிரைவர் மாணிக்கம்

Shiva Chelliah

Au Revoir [Book Review]: The Pain and the Glory of Being a Doctor

Lakshmi Muthiah

Friends in different phases of life

Penbugs

5 BENEFITS YOU GET IF YOU DON’T WEAR MAKEUP!

Penbugs

சென்னை..!

Kesavan Madumathy

திரு.குரல்..!