Editorial/ thoughts

மனிதம்..!

அவன் இன்னும் மாறவே இல்ல அப்படியே தான் இருக்கான்..?
தன்னால முடிந்த வரை முடியாது என்பதை இன்னொருவருக்கு சொல்லிவிடக்கூடாது என்பதை அவன் மேலும் மேலும் செய்து கொண்டே இருக்கிறான்

அன்று ஒரு நாள் தன்னிடம் இருக்கும் குறைந்த மதிப்பிலான தொகையில் ஒரு தயிர் சாதம் வாங்கி வந்து அந்த வேப்ப மரத்தின் நிழலில் அவன் அமர்ந்த போது
ஒரு பதினைந்து வயது சிறுவன் அண்ணன் காலைல இருந்து சாப்பிடல ஏதாவது வாங்கித்தரமுடியுமா..? என்று இவனை பார்த்து கேட்டவுடன் தன் கையில் வைத்திருந்த தயிர் சாதத்தை அவனிடம் கொடுத்து சாப்பிட சொல்லிவிட்டு அருகே இருந்த தண்ணீர் குழாயில் ஐந்து க்ளாஸ் தண்ணீரை வயிறு முட்ட குடித்துவிட்டு அந்த சிறுவனிடம் மீண்டும் சென்று அவனுக்கு ஒரு க்ளாஸ் தண்ணீரை கொடுத்துவிட்டு சாப்பாடு போதுமா..? இல்லை இன்னும் பசி அடங்கவில்லையா என்று கேட்டான், பசி அடங்கவில்லை தான் ஆனால் வயிற்றுக்கு போதும் என்ற மனம் வந்து விட்டது ஏனென்றால் இது எனக்கான உணவு இல்லை என்று அந்த சிறுவன் பதிலளித்தான், இது உனக்கான உணவு இல்லை என்று யார் சொன்னார்..? இந்த உலகில் விதைக்கப்பட்ட உணவு முறைகள் யாவும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், இது எனக்கான உணவு இது உனக்கான உணவு இது அவனை மட்டுமே சார்ந்த உணவு என்று எழுதப்படாத சட்டம் இன்னும் வரையறுக்கப்படவில்லை, உனது பசி தீர்க்க கிடைத்த உணவு அது, இந்தா இதையும் வைத்துக்கொள் என்று மேலும் ஒரு புளி சாதத்தை நீட்டினான், இது உன் போதும் என்ற மனதுக்காக, சாப்பிட்டு தண்ணிகுடி நான் கிளம்புகிறேன் என்று தன் பசியையும் பொருட்படுத்தாமல் அந்த ஐந்து க்ளாஸ் தண்ணீருடன் கையில் வேறு பணமின்றி பேருந்துக்கு காசு இல்லாமல் வழி போக்கனாய் வருபவர்களிடம் ஆங்காங்கே உதவி கேட்டு தன் வீட்டிற்கு வந்தடைந்தான், இது அவனை பற்றிய பெருமைக்கு நான் உங்களிடம் சொல்லவில்லை, அவன் ஏழை தான் ஆனால் அடுத்தவன் பசியை போக்கும் ஏழை,அன்று அந்த சிறுவனின் பசியை போக்கும் ஒரு ஒப்பற்ற இறை பாலன் அவன், இசை போன்று உணவும் நம் மனதினை சாந்தப்படுத்தும் அன்றாட தேவை தான், ஒருவன் எவ்வளவு தாழ்வு நிலைக்கு சென்றாலும் சில பாடல்களின் இசை அவனை தன்னிலைக்கு கொண்டு வரும் தகுந்த சூழலுக்கேற்ப,

வாய்க்குத்தான் வகை வகையாய் அறுசுவையில் உணவு !
செவிக்கும் உணவா?ஆம் செவிக்கும் உணவு உண்டு.
“சாப்பாடு ரெடி ” தாயின் குரல் !
ஆனால் காதில் ‘ஹெட்போனை ‘ மாட்டிக்கொண்டு இளையராஜா
இசையில் மூழ்கியிருக்கும் தந்தைக்கும் ,
ஏ.ஆர் .ரகுமான் இசையில் ஆடிக்கொண்டிருக்கும் மகனுக்கும்
தாயின் அழைப்பு கேட்கவில்லை !
“எத்தனை தடவை கூப்பிடுவதுசாப்பாடு ஆறப்போகுது ”
மீண்டும் அலறல் சமையல் அறையிலிருந்து !
தந்தையும் மகனும் கண்டு கொள்ளவே இல்லை !
வள்ளுவரும் இவர்களுக்குத் துணை போகிறார் .

**
செவிக்கு உணவு இல்லாத போது
சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
**

மேலும் உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட உணவை சிறிது நேரம் கூட காக்க வைக்காமல் கைபேசியை உபயோகிக்காமல் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் மூழ்கி விடாமல் உடனே உண்ணுங்கள், நீங்கள் உங்கள் உணவை காக்கவைக்கும் நேரம் எடுக்கும் ஒவ்வொரு அலட்சியமான நொடியிலும் அங்கு ஒருவன் இந்த உணவின்றி வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தெரு தெருவாய் அலைகிறான்,
உலகில் மிக கொடியது பசி
முடிந்தவரை அடுத்தவரின் பசியை போக்குங்கள் உங்களுக்கு தேவையான உணவு உங்களுக்கானது மட்டும் இல்லை அதை பகிர்ந்து உண் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்,

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் நமக்கு கிட்டிய உணவை பகிர்ந்துண்ணுவோம் என்போம் நாம்!

(சில ஒப்பனைகளுக்காக ஒரு பத்தி மட்டும் வேறு ஒரு பெயர் தெரியாத எழுத்தாளரிடம் இருந்து Reference – ற்க்காக எடுத்துக்கொள்ளப்பட்டது)

Related posts

9 REASONS WHY BEING THE SINGLE CHILD SUCKED

Penbugs

A lullaby for Asifa

Penbugs

It was my first time

Penbugs

பிரபாகரம் மறையாது!

Dhinesh Kumar

Remembering B. R. Ambedkar

Penbugs

Is hair in food a health risk?

Penbugs

Dear Chinmayi Akka…

Penbugs

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs

Naked

Penbugs

Ban Sterlite or Blast People

Penbugs

Old Madras in Pictures

Penbugs

IT HAS BEEN A YEAR SINCE HER DEATH!

Penbugs