Coronavirus

ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவு

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16116 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு 519 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 4200 பேரும், டெல்லியில் 1893 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.

மத்திய அரசு, கொரோனாவை கட்டுப்படுத்த முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்ட 21 நாட்களை, மே 3ம் தேதி வரை நீட்டித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்தசூழலில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் மே 7ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், அதுவரை எந்தவிதமான தளர்வுக்கும் வாய்ப்பு இல்லை என்றும் அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். மேலும் அங்கு வீடுகளுக்கு உணவுப்பொருட்களை டெலிவரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Akshay Kumar tests positive for coronavirus

Penbugs

Police Station celebrates conviction of two rapists

Penbugs

Fearing COVID19, officials dump dead man in garbage van; suspended

Penbugs

COVID19: Teacher offers Quarantine hug to her students at her residence

Penbugs

கோவிஷீல்டு தடுப்பூசி விலை ஏற்றம்

Kesavan Madumathy

Russia to register world’s 1st COVID19 vaccine in a few days: Putin

Penbugs

England set to postponed India tour: Reports

Penbugs

“கொரோனாவை கட்டுப்படுத்தும் கால அளவு இறைவனுக்குத்தான் தெரியும்!” – முதல்வர் பழனிசாமி

Kesavan Madumathy

Lockdown restrictions announced in TN from May 15

Penbugs

நாடு முழுவதும் செப்-ல் கல்வியாண்டு : யூ.ஜி.சி. பரிந்துரை!

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy